விஜய் தொலைக்காட்சியில் ராஜா ராணி 2வில் நடித்து வந்த சங்கீதாவுக்கு திருமணம் நடந்து முடிந்துள்ளது. அந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அவரே தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் ராஜா ராணி 2 தொடரில் ஹீரோ சரவணனின் கடைசி தம்பி ஆதியின் மனைவியாக ஜெசி என்கிற கதாபாத்திரத்திலும் நடித்து வந்தவர் சங்கீதா. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த தொடர் முடிந்த பிறகு தற்போது அவர் எந்த தொடரிலும் கமிட் ஆகாமல் போட்டோ ஷூட், ரீல்ஸ், வீடியோக்கள் என்று பகிர்ந்து வருகிறார். இந்த நிலையில் அவர் சில நாட்களுக்கு முன்பு தனக்கு திருமணம் நடைபெற இருப்பதாகவும். தன்னுடைய கணவர் பெயர் V-ல் ஆரம்பம் ஆகும் என்றும் அறிவித்திருந்தார்.

இதனால் சங்கீதா மற்றும் வாசன் இருவரும் காதலிக்கிறார்கள் என்று சமூக வலைத்தளங்களில் வதந்தி கிளம்பியது. அதற்கு முக்கிய காரணம் சங்கீதாவின் சகோதரரும் வாசனும் நெருங்கிய நண்பர்கள்.

எனவே தனது வருங்கால கணவர் பெயர் V என்ற எழுத்தில் ஆரம்பிக்கும் என்று சங்கீதா கூறி இருந்ததால் அது வாசன் தான் என்று நெட்டிசன்கள் புரளியை கிளப்பத் தொடங்கினர். பின்னர் சங்கீதா தனது திருமண பத்திரிகையை வெளியிட்டு தன்னுடைய கணவர் பெயர் விக்னேஷ் என்றும், ஆகஸ்ட் 20ஆம் தேதி தங்களுக்கு திருமணம் நடக்க இருப்பதாகவும் அறிவித்திருந்தார்.

மேலும் தன்னுடைய நிஜ பத்திரிக்கையை பகிர்ந்து வாசன் தன்னுடைய இளைய சகோதரர் போன்றவர், இனிமேல் இதுபோன்ற புரளிகளை பரப்பாதீர்கள், உங்கள் அன்புக்கு நன்றி என்று பதிவிட்டு இருக்கிறார். இதனால் சங்கீதா வாசன் திருமண சர்ச்சை முடிவுக்கு வந்தது.

இந்த நிலையில் இன்று தனது கணவர் அர்ஜுனை திருமணம் செய்துள்ளார் சங்கீதா. அந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். ராஜா ராணி 2வில் நடித்த நடிகர் பலரும் நேரில் சென்று அவருக்கு திருமண வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.!
View this post on Instagram