பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து திடீரென விலகிய ரித்திகா.? இனி இவருக்கு பதில் இவர்.?

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலிலிருந்து அமிர்தா கதாபாத்திரத்தில் நடித்து வரும் ரித்திகா தமிழ்ச்செல்வி தற்போது விலகி இருக்கும் செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதற்கு பதிலாக யார் நடிக்க இருக்கிறார்கள் என்கிற தகவலும் தற்போது வெளியாகியிருக்கிறது. இந்த தகவலை புதிதாக நடிக்க உள்ள நடிகையே வீடியோ மூலமாக சூசகமாக அறிவித்திருக்கிறார். பாக்கியலட்சுமி ஷூட்டிங் நடக்கும் வீட்டில் இருந்து அவர் அந்த புகைப்படங்களை பகிர்ந்து சூசகமாக அறிவித்திருக்கிறார். பாக்கியலட்சுமி சீரியல் பலருக்கும் மனம் கவர்ந்த சீரியலாக இருந்து வருகிறது. இந்த சீரியலில் பாக்கியாவின் இரண்டாவது மருமகளாக அமிர்தா என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் ரித்திகா தமிழ் செல்வி. விஜய் டிவியில் ஏற்கனவே ஒளிபரப்பான ராஜா ராணி சீரியலில் நடித்து சின்னத்திரைக்குள் நுழைந்தார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது. 

பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து திடீரென விலகிய ரித்திகா.? இனி இவருக்கு பதில் இவர்.? 1

விளம்பரம்

பின்னர் இவருக்கு திருப்பு முனையாக அமைந்த ஒரு நிகழ்ச்சி என்று சொன்னால் அது குக் வித் கோமாளி தான். இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் இவர் பெரிதும் ரசிக்கப்படும் நடிகையாக மாறிப் போனார். அந்த பிரபலத்தை கொண்டு இவருக்கு பாக்கியலட்சுமி சீரியலில் அமிர்தா என்கிற கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இதில் பாக்யாவின் இளைய மகனான எழிலுக்கு ஜோடியாக நடித்து அசத்தி வருகிறார் ரித்திகா. இந்த நிலையில் ரித்திகா இந்த சீரியலில் இருந்து விலகி விட்டதாகவும் அவருக்கு பதிலாக நடிகை அக்ஷிதா அசோக் இந்த சீரியலில் நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. அவர் விலகியதற்கான காரணம் தெரியவில்லை. அவர் பிக்பாஸுக்கு செல்ல இருப்பதாக சில அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன. இதுகுறித்து ரித்திகா எந்தவிதமான அறிவிப்பையும் வெளியிடாமல் இருந்து வருகிறார்.

விளம்பரம்

இந்த நிலையில் அன்பே வா, காற்றுக்கென்ன வேலி போன்ற தொடர்களில் நடித்து வரும் அக்ஷிதா அசோக் தற்போது ரித்திகா போலவே உடை அணிந்தும் மேக்கப் போட்டுக் கொண்டும் பாக்கியலட்சுமி சீரியல் வீட்டிலிருந்து புது வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார் . அதை பார்த்த பலரும் இனிமேல் நீங்கதான் புது அமிர்தாவாக நடிக்க போகிறீர்களா? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புடன் ப்ரோமோ வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நீங்களும் அக்ஷிதா அசோக் வெளியிட்டுள்ள அந்த வீடியோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..! 

 

View this post on Instagram

 

A post shared by akshitha_ashok__ (@akshitha_ashok__)

விளம்பரம்

Instagram Video Credits: Akshitha Ashok

விளம்பரம்

Leave a Comment