லியோ படத்திற்கு தான் எழுப்பிய கடுமையான கண்டனத்தால் தான் தற்போது படக் குழுவினர் அவசரமாக மாற்றத்தை செய்து இருப்பதாக அனைத்து மக்கள் அரசியல் கட்சி என்கிற அமைப்பை நடத்தி வரும் ராஜேஸ்வரி பிரியா தற்போது பதிவு ஒன்றை போட்டிருக்கிறார். தொடர்ந்து சமூகத்தில் நடக்கும் அநீதிகள் குறித்து சமூக வலைத்தளங்களிலும் மீடியாக்களிலும் பதிவிட்டும் பேசியும் வருபவர் ராஜேஸ்வரி பிரியா. சமீப காலமாக திரைப்படங்களில் சமூக அக்கறை இல்லாதது குறித்து அவர் பதிவிட்டும் பேசியும் வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் லியோ படத்திலிருந்து வெளியான நான் ரெடி தான் என்கிற பாடல் குறித்து பதிவு ஒன்றை போட்டிருந்தார் அதில் அவர், “நடிகர் விஜய் நடித்த லியோ படத்தின் பாடல் முகம் சுளிக்கும் அளவிற்கு இருப்பது மன வேதனை அளிக்கிறது, மதுவை மையபடுத்தும் பாடல் வரிகள் மற்றும் பாடல் முழுவதும் வாயில் சிகரெட். இந்த நிலை இப்படியே நீடித்தால் சினிமாவினால் ஏற்படும் பாதிப்பு இளைஞர்கள் வாழ்க்கையை குட்டி சுவராக்கிவிடும். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இளைஞர்களை மது குடிக்க மற்றும் புகை பிடிக்க தூண்டுவதா? எவ்வளவு மோசமாக நீங்கள் சமூகத்தினை சீரழித்தாலும் யார் கேட்க போகிறார்கள் என்ற தைரியம்தானே உங்களுக்கெல்லாம்? பணத்திற்காக எதை வேண்டுமென்றாலும் செய்யும் உங்களுக்கு கட் அவுட், மாலை, மகுடம் இதெல்லாம் மூட தனத்தின் உச்சம். பொறுக்கி போல நடிக்கும் நடிகர் விஜய் அவர்களே கஞ்சாவிற்கும் மதுவிற்கும் அடிமையான மகன்களின் தாய்கள் இங்கே கதறி கொண்டிருக்க இதையெல்லாம் ஊக்குவிக்கும் நீங்கள் மனிதனே இல்லை. இந்த பாடலை சொந்த குரலில் பாடுவது வேற பெருமையா? லட்சகணக்கான அம்மாக்களின் சாபம் உங்களை சும்மா விடாது” என்று நடிகர் விஜய் மீது காட்டமான விமர்சனங்களை முன்வைத்து பதிவை போட்டிருந்தார். இந்த பதிவிற்கு பலரும் ஆதரவும் எதிர்ப்பும் தெரிவித்து வந்தனர். மேலும் பாடலில் புகைபிடித்தல் உடல் நலத்திற்கு கேடு என்கிற வாசகத்தை சேர்க்க வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்திருந்தார். மேலும் பொறுக்கித்தனமான பாட்டு இது, இதெல்லாம் ஒரு பாடலா? எதை பாடுகிறோம் என்பது கூடத் தெரியாமல் இருக்கும் நீங்கள் என்ன மண்ணாங்கட்டிற்கு பொதுநலம் குறித்து மாணவர்களுக்கு விருது கொடுக்கிறீர்கள் என்று கடுமையாகவும் பேட்டிகளில் பேசி வந்தார்.
இது விஜய் ரசிகர்களிடையே சற்று கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது இந்த பாடலின் வீடியோவில் புகைபிடிக்கும் காட்சிகளில் வரும் இடங்களில் எல்லாம் “புகைபிடித்தல் புற்றுநோயை உண்டாக்கும் உயிரை கொல்லும்” என்ற வாசகம் சேர்க்கப்பட்டுள்ளது. இது குறித்து பதிவிட்டு இருக்கும் ராஜேஸ்வரி பிரியா “ஆட்டம் கண்ட லியோ படக்குழு, தனது கடுமையான கண்டனத்திற்கு பிறகு புகைப்பிடித்தல் உடல் நலத்திற்கு கேடு என அவசரமாக வீடியோவில் பதிவேற்றி இருக்கிறது. வெற்றி நமதே, இன்னும் தொடரும் என்று பதிவிட்டு இருக்கிறார் அவரது இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவை நீங்களும் காண கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்.! Watch the Below Video.!
Youtube Video Embed Code Credits: IBC Tamil