என்ன பயங்கரமா அழ வெச்சிட்டாப்பா நீ!! நெகிழ்ச்சியாக டான் படத்திற்கு வாழ்த்து கூறிய தலைவர்.

வெளியிட்டது

கடந்த மே 13ஆம் தேதி வெளியான சிவகார்த்திகேயனின் “டான்” படம் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. சிவகார்த்திகேயன், பிரியங்கா அருள் மோகன், எஸ்.ஜே.சூர்யா, பாலா, சிவிங்கி என பலர் நடித்து சிபி சக்ரவர்த்தி எனும் அறிமுக இயக்குனர் இயக்கத்தில் வெளியான இந்த படம், ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்று வசூல் வேட்டை ஆடி வருகிறது.

என்ன பயங்கரமா அழ வெச்சிட்டாப்பா நீ!! நெகிழ்ச்சியாக டான் படத்திற்கு வாழ்த்து கூறிய தலைவர். 1

படத்தின் முதல் பாதி கொஞ்சம் அப்படி இப்படி என பலர் விமர்சித்தாலும் படத்தின் இரண்டாம் பாதி பெரும் அளவில் ரசிகர்களை கவர்ந்துள்ளது. குறிப்பாக கடைசி 30 நிமிடங்கள் பார்த்து பலரும் கண்ணீர் விட்டு அழுதுள்ளனர். அந்த அளவிற்கு பயங்கரமான செண்டிமெண்ட் காட்சியான அதில் சிவாவின் நடிப்பும், சிபி சக்ரவர்த்தியின் இயக்கமும் மக்களை நிகழ செய்துள்ளது.

படத்தை பார்த்த பலரும் இதே கருத்தை கூறிவருகின்றனர். இந்நிலையில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அண்மையில் படத்தை பார்த்து நடிகர் சிவாவிற்கு போன் செய்து பேசியுள்ளாராம். அப்போது “கடைசி 30 நிமிடங்கள் என்னையும் மீறி என்ன பயங்கரமா அழுக வைச்சிட்டா பா நீ!” என உணர்ச்சி பூர்வமாக படத்திற்கு வாழ்த்து கூறியுள்ளாராம்.

இதை நடிகர் சிவா ஒரு பேட்டியில் கூறியுள்ளார். நடிகர் ரஜினியின் தீவிர ரசிகனான சிவ கார்த்திகேயன் படங்களில் கூட அதை பல தடவை பதிவு செய்துள்ளார். இந்த வாழ்த்து ஒன்றே தனக்கு போதும் எனவும் அவர் நெகிழ்ச்சியாக கூறியுள்ளார் சிவகார்த்திகேயன்.

Video Courtesy – Behindwoods.

 

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்