Categories: சினிமா

மகன்கள் காலில் நலங்கு வைத்த ஐஸ்வர்யா, நின்று ரசித்த சூப்பர் ஸ்டார்.! ரஜினி வீட்டு தீபாவளி

வெளியிட்டது

நேற்று உலகம் எங்கிலும் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்தியர்கள் தீபாவளியை கொண்டாடி வந்த நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும் தனது குடும்பத்துடன் தீபாவளியை கொண்டாடி இருக்கிறார். இந்த புகைப்படங்களை அவரது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது சோஷியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். இந்தியாவில் மட்டுமல்ல, உலகமெங்கும் வாழும் இந்திய மக்களுக்கு தீபாவளி என்றாலே ஒரு கொண்டாட்டம் தான். புத்தாடை உடுத்தியும், பட்டாசுகள் வெடித்தும் மக்கள் கொண்டாடி வருகின்றனர். தமிழில் கோலிவுட்டில் உள்ள நடிகர்கள் அனைவரும் தீபாவளியை சிறப்பாக கொண்டாடியுள்ளனர். அந்த வையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது பேரன்களுடன் தீபாவளியை கொண்டாடி இருக்கிறார்.

மகன்கள் காலில் நலங்கு வைத்த ஐஸ்வர்யா, நின்று ரசித்த சூப்பர் ஸ்டார்.! ரஜினி வீட்டு தீபாவளி 1

மூத்த மகள் ஐஸ்வர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் சில புகைப்படங்களை பகிர்ந்து இருந்தார். தனுஷ், ஐஸ்வர்யா தம்பதிகளுக்கு திருமண உறவு கசந்துவிட்ட நிலையில் தனது இரு மகன்களுடன் அப்பா ரஜினிகாந்துடன் வாழ்ந்து வருகிறார் ஐஸ்வர்யா. தனுஷ்-ஐஸ்வர்யா இடையே சமாதான பேச்சுக்கள் நடந்து முடிந்துவிட்டது என்று சொல்லப்பட்ட போதும் அது குறித்து முழுமையான தகவல்கள் கிடைக்கவில்லை. தனுஷ் மற்றும் ரஜினியின் ரசிகர்கள் இருவரும் ஒன்றாக சேர வேண்டும் என்று எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். தீபாவளி அன்று இருவரும் ஒன்றாக சேரப் போகிறார்கள், தனுஷ் பிரம்மாண்ட வீடு கட்டிக் கொண்டிருக்கிறார் மனைவி, மகன்களுடன் புது வீட்டில் குடி செல்ல இருக்கிறார்கள் என்ற வதந்தி எல்லாம் றெக்க கட்டி பறந்து வருகிறது.

இந்த நிலையில் சூப்பர் ஸ்டார் வீட்டில் தீபாவளி நேற்று சிறப்பாக கொண்டாடப்பட்டது. அப்போது ஐஸ்வர்யா தனது மகன்களுக்கு காலில் மஞ்சள், குங்குமம் வைக்கிறார். இது என்ன மாதிரியான சடங்கு என்பது தெரியவில்லை. ஆனால் பின்னால் அதை வெள்ளை நிற ஜிப்பாவுடன் நின்று கொண்டு ரசித்துக் கொண்டிருக்கிறார் சூப்பர் ஸ்டார். இந்த புகைப்படங்கள் தற்போது வெளியாகி வைரலாகி இருக்கிறது.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்