படம் வேற லெவெல்ல இருக்கு.! தனுஷ் நடிப்பு Goosebumps ஆகுது.! நானே வருவேன் படத்தை பற்றி பொதுமக்கள் கருத்து.

நடிகர் தனுஷ் நடித்துள்ள நானே வருவேன் படத்தில் இன்று காலை திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது. அந்த படம் குறித்த கருத்துக்களை மக்கள் தற்போது தெரிவித்துள்ளனர். நடிகர் தனுஷ் தனது அண்ணன் செல்வராகவனுடன் இணைந்து நானே வருவேன் என்ற படத்தில் நடித்து இருந்தார். இந்தப் படத்தை கலைப்புலி எஸ் தாணுவின் வி கிரியேஷன்ஸ் தயாரிக்க, யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். இரண்டு வித்தியாசமான வேடங்களில் தனுஷ் நடித்திருந்த இந்த படம், இன்று காலை 8 மணி முதல் திரையரங்குகளில் வெளியாகி இருந்தது. படத்தை பார்ப்பதற்காக தனுஷ் ரசிகர்கள் திரையரங்குகளில் காலை முதலே குவிந்து வந்தனர். கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.

படம் வேற லெவெல்ல இருக்கு.! தனுஷ் நடிப்பு Goosebumps ஆகுது.! நானே வருவேன் படத்தை பற்றி பொதுமக்கள் கருத்து. 1

விளம்பரம்

தனுஷ் கடைசியாக நடித்திருந்த படம் திருச்சிற்றம்பலம். இந்த படம் வெளியான 15 நாட்களில் 100 கோடி வசூலை தாண்டி இருந்தது. தற்போது தனுஷ் அடுத்தபடியாக வாத்தி உள்ளிட்ட படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இதற்கிடையே தனது அண்ணன் செல்வராகவனுடன் இணைந்து நானே வருவேன் படத்திலும் நடித்திருந்தார். இந்த படத்தின் டீசர், ட்ரெய்லர், பாடல்கள் என வெளியாகி அனைத்தும் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. மேலும் இரட்டை வேடங்களில் தனுஷ் நடித்திருப்பதால் படத்திற்கான எதிர்பார்க்கும் அதிகமாக இருந்தது. ட்ரைலரில் ஒரு சீனில் சைக்கோ கொலையாளியாக ஒரு தனுஷும், சாந்தமான இன்னொரு தனுஷும் இருந்ததால் இது படத்திற்கான எதிர்பார்ப்பை மேலும் கூட்டியது.

தொடர்புடையவை  ஆர்மியில் தாடி எப்படி..? கேள்விகளுக்கு பதிலடி கொடுத்த சிவகார்த்திகேயன்..!

படம் வேற லெவெல்ல இருக்கு.! தனுஷ் நடிப்பு Goosebumps ஆகுது.! நானே வருவேன் படத்தை பற்றி பொதுமக்கள் கருத்து. 3

விளம்பரம்

தற்போது படம் வெளியாகி இருக்கிறது. படம் குறித்த கருத்துக்களை பொதுமக்கள் கூறி வருகின்றனர். படம் நன்றாக இருந்தது. செல்வராகவனையும், தனுஷையும் மக்கள் புகழ்ந்து வருகின்றனர். நீங்களும் அந்த வீடியோவை காண.. Watch the below video..

விளம்பரம்

Youtube Video Code Embed Credits: Chennai day

விளம்பரம்

Leave a Comment