நடிகர் ரஜினிகாந்த் தற்போது தனது மனைவி, மகள் சகோதரர் உள்ளிட்ட அனைவருடனும் அமர்ந்து சாப்பிடும் வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. தனது அண்ணனின் எண்பதாவது பிறந்த நாள் விழாவிற்கு பெங்களூரு சென்று அவருக்கு மிகப்பெரிய விருந்தே வைத்துள்ளார் அவரது அண்ணன் சத்யநாராயணா. அந்த வீடியோக்கள் தான் தற்போது இணையத்தில் பரவி வருகிறது. தமிழ் திரை உலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். இவர் திரைத்துறைக்கு வந்து சுமார் 40 ஆண்டுகளுக்கும் மேல் ஆகிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இதுவரை சுமார் 168 படங்களுக்கு மேல் நடித்து முடித்து இருக்கிறார் ரஜினிகாந்த். தற்போது அவர் நெல்சன் இயக்கி வரும் ஜெயிலர் என்கிற படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் டைட்டில் டீசர் சமீபத்தில் வெளியாகி இருந்தது .அதில் அவர் முத்துவேல் பாண்டியன் என்கிற அடையாளத்துடன் ரவுடி கெட்டப்பில் கையில் வீச்சருவாளுடன் வருவது போன்ற வீடியோ ஒன்றை வெளியிட்டு ரஜினி ரசிகர்களை குஷிப்படுத்தி இருந்தார் இயக்குனர் நெல்சன். இந்தப் படத்தில் ரஜினிகாந்த் உடன் இணைந்து தமன்னா, ரம்யா கிருஷ்ணன் யோகி பாபு, ரெட்டிங் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. படத்தின் படப்பிடிப்புகள் தீவிரமாக நடந்து வருகிறது.
இதற்காக ரஜினிகாந்த் அடிக்கடி ராஜஸ்தான் உள்ளிட்ட வட மாநிலங்களுக்கு பயணம் செய்து வருகிறார். அந்த புகைப்படங்கள் அவ்வப்போது வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த நிலையில் ரஜினிகாந்த் தனது அண்ணன் சத்ய நாராயணாவின் எண்பதாவது பிறந்தநாளுக்காக இரண்டு நாட்களுக்கு முன்பு பெங்களூருவுக்கு சென்றிருந்தார். அங்கு அண்ணனின் எண்பதாவது பிறந்தநாளுக்கு பூஜைகள் சடங்குகள் அனைத்தையும் செய்த புகைப்படங்கள் வெளியாகியிருந்தது. நீண்ட இடைவெளிக்கு பின்னர் தனது அண்ணன் மற்றும் குடும்பத்துடன் அவர் நேரத்தை செலவிட்ட புகைப்படங்கள் ரஜினி ரசிகர்களுக்கு உற்சாகத்தை கொடுத்திருந்தது. இந்த நிலையில் இன்று ஒரு வீடியோ வெளியாகி இருக்கிறது.
அதில் பிறந்தநாள் நிகழ்ச்சிகள் முடிந்து அனைவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டு கொண்டு இருக்கின்றனர். ரஜினியின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், லதா ரஜினிகாந்த் மற்றும் ரஜினி அவரது சகோதரர் ஆகியோர் அருகருகே அமர்ந்து உணவு சாப்பிட்டுக் கொண்டிருக்கின்றனர். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. நீங்களும் அந்த வீடியோவை காண கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும் .! Watch the Below Video..!
Youtube Video Embed Code Credits: Viral Videos 3.O