இரண்டு நாட்களுக்கு முன்பு ஒரு விழாவில் சீமானை சந்தித்த அசீம் அவரை கட்டிப்பிடித்து முத்தமிட்டு இருந்த புகைப்படங்கள் வெளியாகி இருந்த நிலையில், தற்போது அசீமை ட்விட்டரில் நெட்டிசன்கள் வச்சு செய்து வருகின்றனர். நிகழ்ச்சி தொகுப்பாளராக தனது வாழ்க்கையை தொடங்கியவர் அசீம். பின்னர் இவருக்கு சிறு சிறு நாடகங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆரம்பத்தில் துணை வேடங்களில் நடித்த வந்து அவர் பின்னர் விஜய் தொலைக்காட்சி ஒளிபரப்பான பகல் நிலவு என்கிற நாடகத்தின் மூலமாக ஹீரோவாக அறிமுகமானார். இந்த சீரியலில் உடன் நடித்த ஷிவானி நாராயணனுடன் இவரது கெமிஸ்ட்ரி ஒத்துப்போனதால் இந்த இரண்டு பேருக்கும் ரசிகர் பட்டாளம் பெருகத் தொடங்கியது. குறுகிய காலத்திலேயே இவர்கள் இருவரும் மிகப்பெரிய பாப்புலர் ஆனார்கள் தொடர்ந்து அசீம் ஷிவானி இருவரும் காதலித்து வருவதாகவும் விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் தகவல்கள் பரவிக்கொண்டே இருந்தது. ஆனால் அந்த தகவலை ஷிவானி தரப்போ அசீம் தரப்போ ஏற்கவும் இல்லை மறுக்கவும் இல்லை.

இந்த நிலையில் அசீமுக்கு பிக்பாஸில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. பிக்பாஸ் சீசன் 6ல் ஒரு போட்டியாளராக அசீம் கலந்து கொண்டிருந்தார். ஆரம்பம் முதலே சர்ச்சைக்குரிய போட்டியாளராக இருந்து வந்த இவர் இறுதியில் டைட்டிலையும் வெற்றி பெற்றிருந்தார். இது பிக்பாஸ் ரசிகர்கள் பலருக்கும் பிடிக்காமல் போனது. விஜய் டிவியையும், பிக்பாஸையும் புறக்கணிக்க வேண்டும் என்று கண்டன குரல்கள் தொடர்ந்து எழுந்து வந்தது. மேலும் உண்மையான வெற்றியாளர் விக்ரம் தான் என்றும் தொடர்ந்து இணையத்தில் நெட்டிசன்கள. கருத்து தெரிவித்து வந்தனர். மேலும் குளோன்(கோமாளி) அசீம், அப்யூசர் அசீமல என்ற வார்த்தைகளும் ட்விட்டரில் ட்ரெண்டாக தொடங்கியது. இதையெல்லாம் கண்டு கொள்ளாத அசீம் தொடர்ந்து புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவேற்றி வருகிறார். மேலும் எங்கு சென்றாலும் கோப்பைகளை கையுடன் எடுத்துக் கொண்டு ஊர் ஊராக வலம் வந்து கொண்டிருக்கிறார். பிக் பாஸ் வரலாற்றிலேயே டைட்டிலை வென்ற ஒருவர் இதுபோல் பொதுமக்களால் விமர்சிக்கப்பட்டது கிடையாது. அந்த அளவிற்கு விமர்சனங்களை பெற்று வருகிறார் அசீம்.
டேய் clown 🤡 உங்க நொண்ணன் சொல்றதக் கேட்டுட்டு பதில் சொல்லு.. உங்க ரெண்டு பேருல யாரு ஒரிஜினல் பைத்தியகாரன்.? pic.twitter.com/VAf9WWnVzK
— Sasikumar Lakshmanasamy (@Sasi_5451) February 21, 2023
உங்கொண்ணன் சொன்னத பார்த்து நீயே துப்பிக்கோ pic.twitter.com/r1Rc15dNo9
— Imran (@TamizhanImran) February 21, 2023
இந்த நிலையில் சமீபத்தில் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் சீமானை சந்தித்த அவர் அவரை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து அந்த புகைப்படங்களை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். மேலும் எங்கு பிறப்பினும் தமிழன் தமிழனே, இங்கு பிறப்பினும் அயலான் அயலானே என்கிற வாசகங்களுடனும், கொள்கை கருத்து வேறுபாடுகள் தாண்டிய நட்பு உறவு இது. நான் சீமானின் தம்பி என்றும் பதிவிட்டிருந்தார். இது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருந்தது ஏனென்றால் பிக்பாஸ் வீட்டில் இருந்தபோது தான் ஒவ்வொரு தீபாவளிக்கும் உதயநிதி ஸ்டாலின் மற்றும் கிருத்திகா ஸ்டாலினை சென்று சந்திப்பது வழக்கம். இந்த முறை அண்ணன், அண்ணியை சந்திக்க முடியவில்லை. இருப்பினும் அண்ணனுக்கும் அண்ணிக்கும் தீபாவளி வாழ்த்துக்கள் என்று பிக்பாஸ் வீட்டில் பேசி இருந்தார். இதனால் அசீம் திமுகவைச் சேர்ந்தவர் என்ற கருத்து நிலவிக் கொண்டிருந்த நிலையில், தற்போது இவர் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமானை அசீம் சந்தித்து இருப்பது சற்று பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. மேலும் கொள்கை தாண்டிய உறவு என்றும் அவர் பதிவிட்டிருந்ததும் சிறிது சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்த நிலையில் இந்த புகைப்படத்தை பார்த்த பின்பு இணைய நெட்டிசன்கள் சீமான் பேசிய பழைய வீடியோக்களை எடுத்து அசீமை தற்போது கலாய்த்து வருகின்றனர். ஒருமுறை சீமான் உருது பேசும் தமிழர்களை தமிழர்களாகவே கருத முடியாது, அவர்கள் அயல்நாட்டினராக தான் கருத முடியும் அவர்களை தமிழர்கள் என்று சொல்பவர்கள் பைத்தியக்காரர்கள், உருது பேசுபவர்கள் தமிழர்கள் என்றால் அப்போது பாகிஸ்தானில் இருப்பவர்களும் தமிழர்களா? என்று கேள்வி எழுப்பியிருந்தார் அந்த பழைய பேட்டியின் காணொளிகளை அசீம் பதிவிட்ட புகைப்படங்களுக்கு கீழே பகிர்ந்து தற்போது இணைய நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.!