உன் மூத்த பையன பாக்கணுமா? தாமரையிடம் கேட்ட ராஜு..தாமரையின் மூத்த மகனை சேர்த்து வைக்க போகிறார்களா?

வெளியிட்டது

பிக்பாஸ் சீசன் 5 வில் கலந்து கொண்ட முக்கியமான போட்டியாளர்களுள் ஒருவர்தான் தாமரைச்செல்வி. கோவில் திருவிழாக்கள் மற்றும் தெருக்கூத்துகளில் நாடகங்கள் நடித்து அதன் மூலம் பிரபலமானவர். மிக எளிய பின்னணியிலிருந்து வந்தவர். இவரது தாயார் இன்னமும் குடிசை வீட்டில் தான் வசித்து வருகிறார். கிராமிய பின்னணியும் எதார்த்தமான பேச்சும், எளிமையும் பிக்பாஸ் மூலம் பிரபலமாக்கியது. பிக்பாஸ் சீசன் 5 டைட்டில் வின்னராக இவர் தான் வருவார் என்று அனைவரும் எதிர்பார்த்து இருந்த நிலையில், திடீரென பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறினார். நாடக கலைஞர்கள் மட்டுமல்லாமல் பல மக்களும் தாமரையை ஆதரித்தனர். தாமரைதான் ஜெயிக்க வேண்டும் என்று பலரும் தங்களது ஆதங்கங்களை தெரிவித்து வந்தனர். கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.

உன் மூத்த பையன பாக்கணுமா? தாமரையிடம் கேட்ட ராஜு..தாமரையின் மூத்த மகனை சேர்த்து வைக்க போகிறார்களா? 1

தாமரைக்கு இருந்த வரவேற்பை பார்த்து மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கியது பிக்பாஸ். ஹாட்ஸ்டார் ஓடிடியில் 24 மணி நேரமும் ஒளிபரப்பான பிக்பாஸ் அல்டிமேட் எனும் நிகழ்ச்சியில் பங்கெடுக்கும் வாய்ப்பு கிடைத்தது. இதிலும் அவர் வெற்றி பெறுவார் என்று எதிர்பார்த்த நிலையில் அதிலும் அவரால் வெற்றி பெற முயலவில்லை. தனக்கு டிவியின் மூலம் கிடைக்கும் வாய்ப்பு எல்லாம் ஒன்று விடாமல் பயன்படுத்தி வருகிறார் தாமரைச்செல்வி. தனது குடும்ப கஷ்டத்தை இதன் மூலம்தான் நீக்க முடியும் என்று அவர் உறுதியாக நம்புகிறார். இதனால் அவர் தற்போது பிக்பாஸ் ஜோடிகள் என்னும் நிகழ்ச்சியில் பங்கெடுத்து வருகிறார். பிக் பாஸ் ஜோடிகள் என்பது சீசன் 1 முதல் சீசன் 5 வரை பிக்பாஸில் பங்கெடுத்த போட்டியாளர்களை வைத்து நடத்தப்படும் ஒரு நடன நிகழ்ச்சி ஆகும். இதில் தாமரைச்செல்வி தனது கணவருடன் கலந்து கொண்டுள்ளார்.

இந்த நிகழ்ச்சிக்காக கணவருடன் சேர்ந்து கடுமையான ப்ராக்டிஸ் செய்து அந்த வீடியோக்களை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வருகிறார். இன்று வெளியாகி உள்ள ப்ரோமோவில் தாமரைச்செல்வி தனது மாமியாரை பற்றி கூறுகிறார். நாடகங்கள் முடிந்து வீட்டிற்கு லேட்டாக வரும் போது கூட எனது மாமியார் என்னை திட்டாமல் எனக்கு சோறு ஊட்டி விடுவார் என்று மாமியாரை பற்றி பெருமையாக பேசிக் கொண்டிருக்கும்போதே, தாமரையின் மாமியார் உள்ளே வருகிறார். தாமரைச்செல்வி தனக்கு மருமகள் அல்ல மகள் போன்றவர் என்று அவரது மாமியார் கூறுகிறார். அவருடன் தாமரைச்செல்வியின் சகோதரிகளும் வருகின்றனர்.

அப்போது ராஜு தாமரைச்செல்வியிடம் நீ எப்பொழுதும் உன் மூத்த மகனை பார்க்க வேண்டும் என்று கூறிக் கொண்டே இருப்பாய் அல்லவா? என்று கேட்கிறார். இதைக் கேட்ட தாமரைச்செல்வி ஒரு நிமிடம் திகைப்பில் ஆழ்ந்தார். தாமரைச்செல்விக்கு தனது முதல் திருமணத்தின் மூலம் ஒரு மகன் இருக்கிறார். முதல் கணவனை பிரிந்த தாமரைச்செல்வி இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வருகிறார். அவர்களுக்கும் ஒரு மகன் இருக்கிறார். பிக்பாஸ் வீட்டில் இருந்தபோது தனது மூத்த மகனை பார்க்க வேண்டும் என்று கூறி கதறி அழுதார் தாமரைச்செல்வி. இப்போது தாமரைச்செல்வியின் வீட்டிலிருந்து அனைவரும் வந்துள்ள நிலையில் அவரது மூத்த மகனையும் அழைத்து வந்துள்ளனர் என்றே தெரிகிறது. சஸ்பென்ஸாக உள்ள அந்த ப்ரோமோவை நீங்களும் காண..watch the below video..

Youtube Video Code Embed Credits: Vijay television

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்