Categories: சினிமா

ராஜு முருகன் இயக்கத்தில் கார்த்தியின் அடுத்த படம்!!

வெளியிட்டது
ராஜு முருகன் இயக்கத்தில் கார்த்தியின் அடுத்த படம்!! 1

கார்த்தி நடிப்பில் உருவாகி இருக்கும் கைதி படம் வரும் 25ம் ஆம் தேதியன்று வெளியாக உள்ளது. ஆக்‌ஷன் த்ரில்லர் ஸ்டோரியை மையப்படுத்திய இந்த படத்தில் எந்த ஹீரோயினும் நடிக்கவில்லை. ஆதலால், இப்படத்தில் டூயட் பாடல் எதுவும் இல்லை.இதனையடுத்து, இப்படத்தைத் தொடர்ந்து கார்த்தி அடுத்த படத்திற்கு தன்னை தயார்படுத்தி வருகிறார். இப்படத்தை இயக்குநர் ராஜு முருகன் இயக்கப் போவதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பும் ஏதும் வெளியாகவில்லை.

இந்நிலையில், ராஜு முருகன், ஜீவாவின் ஜிப்ஸி படத்தில் பிஸியாக இருப்பதால், இப்படத்தின் அனைத்து பணிகளும் முடிந்த பிறகு அடுத்த படம் குறித்து அறிவிப்பை ராஜு முருகன் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒலிம்பியா மூவிஸ் தயாரிக்கும் ஜிப்ஸி படத்தில், நடாஷா சிங், லால் ஜோஸ், சன்னி வெயின், சுஷீலா ராமன் உள்ளிட்டோர் பலர் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைத்து இருக்கிறார்.

இன்னும் 2 நாட்களில் கைதி படம் திரைக்கு வரும் நிலையில், இப்படத்திற்கு பிகில் படத்தை விட குறைவான திரையரங்குகள் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. விருமாண்டி மற்றும் டை ஹார்டு ஆகிய படங்களை மையமாக வைத்து இப்படம் உருவாக்கப்பட்டுள்ளதாக
கூறப்படுகிறது.

Vinoth Kumar

தன்னம்பிக்கை தான் வெற்றிக்கு முக்கியமாகும் 😎😎😎 பேனா 🖊️ மை உலகை மாற்றும் As a digital journalist born and raised in Tamil Nadu, I'm on a mission to leverage the digital age to bring you the most relevant and personalized news coverage, all while staying true to our Tamil roots.

வெளியிட்டது

புதிய செய்திகள்