CWC பைனலில் இருந்து பாதியில போனதுக்கு காரணம் இதுதான், உண்மைகளை போட்டு உடைத்த ரக்ஷன்

வெளியிட்டது

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களுக்கு மக்கள் மத்தியில் தனி செல்வாக்கு உண்டு. அதில் குறிப்பாக பிக்பாஸ் மற்றும் குக் வித் கோமாளி இரண்டு ரியாலிட்டி ஷோக்களும் மக்கள் மத்தியில் மிகப் பிரபலமானவை. லட்சக்கணக்கான மக்கள் இந்த நிகழ்ச்சிகளை பார்த்து வருகின்றனர். இதன் ப்ரோமோக்கள் வெளியான சில நிமிடங்களிலேயே மில்லியன் கணக்கான பார்வையாளர்களை பெற்று விடுவது வழக்கமாக இருந்து வருகிறது. அதில் குக் வித் கோமாளி பார்ப்பவர்கள் சிரித்து சிரித்து வயிறு வலி வந்து விடும் அளவிற்கு மிக காமெடியான ஒரு ஷோ ஆகும். சமையல் என்பது சீரியஸாக செய்யக்கூடிய ஒரு வேலை, நாம் விளையாட்டாக கூடுதலாக உப்பையோ அல்லது காரமோ போட்டு விட்டால் அந்த உணவே கெட்டுப் போய்விடும். ஆனால் குறும்புகள் நிறைந்த கோமாளியை அருகில் வைத்துக்கொண்டு நடுவில் பல தடைகளையும் வைத்துக் கொண்டு சமைக்க வேண்டிய சூழலில் குக்குகள் இருப்பார்கள். கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.

CWC பைனலில் இருந்து பாதியில போனதுக்கு காரணம் இதுதான், உண்மைகளை போட்டு உடைத்த ரக்ஷன் 1

அந்த தடைகளை எல்லாம் மீறி அவர்கள் எப்படி சமைக்கிறார்கள் என்பது இந்த ஷோவின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருக்கிறது. மேலும் கோமாளிகளுடன் சேர்ந்து நடுவர்களும் அதன் நிகழ்ச்சி தொகுப்பாளரான ரக்ஷனும் செய்யும் அலப்பறைகள் மேலும் நிகழ்ச்சிக்கு சுவாரசியத்தை கூட்டி வருகிறது. முதல் சீசன் கொடுத்த மாபெரும் வெற்றியால் இரண்டாவது சீசன் ஆரம்பிக்கப்பட்டது, இரண்டாவது சீசனின் போது கொரோனா இருந்த காரணத்தினால் பலரும் வீட்டிலேயே முடங்கி இருந்தபோது, இந்த நிகழ்ச்சி பலருக்கும் ஒரு ஸ்ட்ரெஸ் பஸ்டர் ஆக இருந்தது. இந்த மூன்று சீசன்களையுமே தொகுத்து வழங்கி வந்தவர் ரக்ஷன் தொகுப்பாளராக சில நேரங்களிலும், போட்டியாளர்களுக்கு உதவியாக கோமாளிகளுடன் சில நேரங்களிலும் காமெடி செய்து வருவார். இவருக்கும் தனி ரசிகர் பட்டாளம் இருந்து வருகிறது. இவர் மூன்றாவது சீசன் இறுதி நிகழ்ச்சியில் நிகழ்ச்சியை முழுமையாக தொகுத்து வழங்கவில்லை. பாதியிலேயே வெளியேறினார். மணிமேகலை தான் மீதி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

இதனால் ரக்‌ஷன் இந்த நிகழ்ச்சியிலிருந்து விலகி விட்டார் என்ற வதந்தி பரவ ஆரம்பித்தது. இது குறித்து ரக்ஷன் இடமே ஒரு பேட்டியில் கேட்கப்பட்டது. அவர் கூறியதாவது, இறுதி நிகழ்ச்சியின் போது தனக்கு கடுமையான காய்ச்சல் இருந்ததாகவும், கொரோனா இருக்கும் என்று பரிசோதித்து பார்த்திதால் கொரோனா நெகட்டிவ் என வந்தது, மேலும் தனிப்பட்ட சில காரணங்களுக்காக இறுதி நிகழ்ச்சிக்கு என்னால் வர முடியவில்லை என்றும் கூறியிருந்தார். அவர் பிக்பாஸ் சீசன் 6ல் கலந்து கொள்ள இருக்கிறார் என்ற தகவல் பரவி உள்ளது. இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை, அக்டோபர் முதல் வாரத்தில் பிக் பாஸ் தொடங்க உள்ளதாகக தெரிகிறது. அதிகபட்சம் இவர் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வார் என்றே தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அந்த வீடியோவை நீங்களும் காண.. Watch the below video…

Youtube Video Code Embed Credits: Little Talks

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்