ஐயோ.! கேபி நடிப்பு செம்ம, பின்னுறீங்க கேபி.! பார்த்தி – காவியா pair வேற லெவல்..!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த முக்கியமான தொடர்களில் ஒன்றுதான் ஈரமான ரோஜாவே. இந்த தொடர் மிகப்பெரிய வெற்றி அடைந்ததையடுத்து ஈரமான ரோஜாவே பாகம் 2 எடுக்கப்பட்டுள்ளது. இதில் முதல் சீசனில் ஹீரோவாக நடித்த திரவியம் ஜீவா என்ற கதாபாத்திரத்தில் இதிலும் ஹீரோவாக நடித்து வருகிறார். மேலும் தேன்மொழி எம்பிஏ நாடகத்தில் நடித்த சித்தார்த் பார்த்திபன் கதாபாத்திரத்தில் செகண்ட் ஹீரோவாக நடித்து வருகிறார். இந்த நாடகத்திற்கு மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு இருக்கிறது. இருவரும் ஏற்கனவே பல நாடகங்களில் நடித்திருப்பதால் இவர்களின் நாடகங்களுக்கு மவுஸ் எப்போதுமே அதிகமாக இருக்கிறது. அதேபோல் இதில் ஹீரோயின்களாக கேப்ரியல்லா காவியா காதாபத்திரத்திலும் மற்றும் பிரியா திரவியத்திற்கு ஜோடியாக தங்களது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வருகின்றனர். ஆரம்பத்தில் கடுமையான விமர்சனங்களை பற்றி இருந்தது ஈரமான ரோஜாவே சீரியல். இதன் ப்ரோமோ வெளியான போதே பலரும் இந்த சீரியலை கடுமையாக தாக்கத் தொடங்கினர். கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.

ஐயோ.! கேபி நடிப்பு செம்ம, பின்னுறீங்க கேபி.! பார்த்தி - காவியா pair வேற லெவல்..! 1

விளம்பரம்

திரவியமின் அண்ணன் தான் சித்தார்த். சித்தார்த்துக்கும் பிரியாவிற்கும் திருமணம் நிச்சயம் நடந்த நடைபெற்றது. இதற்கிடையில் பிரியாவின் தங்கையான காவியாவும் திரவியமும் காதலித்து வந்தனர். ஆனால் திருமணத்தன்று கடைசி நேரத்தில் பிரியாவை ரவுடி கும்பல் கடத்தி விட, சித்தார்த்திற்க்கு தம்பியின் காதலியான காவியாவை(கேபி) திருமணம் செய்து வைத்து விடுகின்றனர். இதனால் வேறு வழி இல்லாமல் காவியாவின்(கேபி) அக்கா பிரியாவை தம்பி திரவியம் திருமணம் செய்து கொள்கிறார். இதை பார்த்த நெட்டிசன்கள் பலரும் கடுமையான விமர்சனங்களை கொடுத்து வந்தனர் கடைசி நேரத்தில் மணப்பெண் ஓடி விட்டால் அவரின் தங்கையை பிடித்து கட்டி வைப்பீர்களா?? சரி அது கூட பரவாயில்லை, அண்ணனுக்கு நிச்சயத்த பெண்ணை தம்பிக்கும், தம்பியின் காதலியை அண்ணனுக்கும் மாற்றி திருமணம் செய்து வைப்பீர்களா? என்று கடுமையாக விமர்சித்து வந்தனர் நெட்டிசன்கள். பின்னர் கதை ஒரு கட்டத்தில் விறுவிறுப்பாக செல்ல தொடங்கியது.

தொடர்புடையவை  பாவனிக்கு திடீரென நடந்த அறுவை சிகிச்சை.! ஐயோ அவருக்கு இப்படி ஒரு பிரச்சினையா?

ஐயோ.! கேபி நடிப்பு செம்ம, பின்னுறீங்க கேபி.! பார்த்தி - காவியா pair வேற லெவல்..! 3

விளம்பரம்

ஆரம்பத்தில் காவியாவாக நடிக்கும் கேப்ரியல் சித்தார்த்தை ஏற்றுக்கொள்ளாமல் இருந்து வந்தார். விபத்தில் காரணமாகத்தான் சித்தார்த்தை திருமணம் செய்து கொண்டதால் அவர் விலகியே இருந்தார். ஆனால் தற்போது இவர்கள் இருவரும் செய்யும் ரொமான்ஸ் காரணமாக ரசிகர்களுக்கு கொஞ்சம் கொஞ்சமாக இந்த இரண்டு ஜோடிகளையும் பிடிக்கத் தொடங்கியுள்ளது. திரவியம் மற்றும் பிரியா ஜோடிகள் ஏற்கனவே கொஞ்சம் கொஞ்சமாக இணைந்து வருகின்றனர். ஆனால் சித்தார்த் கேபி கதாபாத்திரங்கள் இணையாமலேயே இருந்து வந்தன. தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில் வீட்டிற்கு வரும் விருந்தாளிகளுக்காக காவியா உணவு சமைத்து உள்ளார். இதை பார்த்த பலரும் இதில் கேப்ரியல்லாவின் காவியா கதாபாத்திரம் பார்ப்பதற்கே மிக அழகாக உள்ளது என்று கமெண்ட் செய்து வருகின்றனர். நீங்களும் அந்த புரோமோவை காண. Watch the below video..

விளம்பரம்

YouTube Video Code Embed Credits: Vijay Television

விளம்பரம்

Leave a Comment