ஆசையாய் செல்பி எடுக்க வந்த ரசிகர்.! போனை தூக்கி போட்டு உடைத்த ரன்பீர் கபூர்.! வைரல் வீடியோ.!

வெளியிட்டது

நடிகர் ரன்பீர் கபூர் செல்பி எடுக்க வந்த ரசிகரின் போனை பிடுங்கி, வீசி எறிந்து இருப்பது தற்போது பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது. அந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி இருக்கிறது. பொதுவாகவே ஸ்மார்ட் போன் பயன்பாட்டிற்கு வந்த பிறகு செல்பி எடுக்கும் மோகம் நம்மிடையே பலருக்கும் அதிகரித்திருக்கிறது. திருமண விழாக்கள், மால்கள், ஹோட்டல்கள், கோவில்கள் என எங்கு சென்றாலும் செல்பி எடுத்து அதை தங்களது சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்வதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றோம். அதே போல பிரபலங்கள் பொதுவெளியில் வரும் பொழுது அவர்களுடைய தனிப்பட்ட உரிமையை மதிக்காமல் போனை நேராக கொண்டு போய் அவர்களின் முகத்திற்கு நேராக நீட்டி செல்பி என்கிற பேரில் தொல்லை செய்வதை பலர் வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர். இது பிரபலங்கள் பலருக்கும் எரிச்சலை ஏற்படுத்துகிறது. தமிழ் திரை பிரபலங்கள் கூட செல்பி எடுக்க வந்தவர்களின் போனை தட்டி விட்டு தங்களது எதிர்ப்பை காட்டி இருக்கின்றனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஆசையாய் செல்பி எடுக்க வந்த ரசிகர்.! போனை தூக்கி போட்டு உடைத்த ரன்பீர் கபூர்.! வைரல் வீடியோ.! 1
பிரபலங்கள் இது குறித்து விளக்கம் அளிக்கும்பொழுது, எங்களிடம் ஒரு அனுமதி கூட பெறாமல், நேராக போனை கொண்டு வந்து எங்கள் முன்பு நீட்டுகிறார்கள். இது எங்களுக்கு மிக எரிச்சலை ஏற்படுத்துகிறது என்கிற ரீதியில் விளக்கம் அளித்து இருக்கின்றனர். பிரபலங்கள் பக்கமும் நியாயம் இருக்கதான் செய்கிறது. அவர்கள் தனிப்பட்ட வாழ்க்கையை வாழ விடாமல் ரசிகர்கள் புகைப்படம் என்கிற பெயரில் தொல்லை செய்வது தற்போது வாடிக்கையாகி வருகிறது. ஆனால் இதை தன்மையாக சொல்லாமல் சில நடிகர்கள் தங்கள் செயலில் காட்டுகிறார்கள். ஃபோனை பிடுங்கி எறிவது, போனை தட்டி விடுவது என்று நடிகர்களும் சற்று முரட்டுத்தனமாகவே நடந்து கொள்கிறார்கள். அது போன்ற ஒரு வீடியோ தான் தற்போது வெளியாகியிருக்கிறது. ஹிந்தியில் பிரபல நடிகராக இருக்கும் ரன்பீர் கபூர் விழா ஒன்றிற்கு வருகை தந்திருக்கிறார். அங்கு ரசிகர் ஒருவர் வந்து செல்பி எடுக்க கேட்டிருக்கிறார்.


ரன்பீரும் செல்பி எடுப்பதற்கு அனுமதித்து அந்த இடத்தில் நின்று போஸ் கொடுக்கிறார் பின்னர் என்ன நினைத்தாரோ என்று தெரியவில்லை ரசிகரின் கையில் இருந்த போனை உடனடியாக பிடுங்கி தனக்கு பின்னால் அசால்டாக வீசி எறிந்து இருக்கிறார். இதனால் அந்த ரசிகர் ஒரு நிமிடம் அதிர்ச்சியில் உறைந்து போய் நிற்கிறார். அந்த காணொளி தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. பலரும் ரன்பீர் இந்த செயலுக்கு எதிராக தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். ரசிகர்கள் இல்லை என்றால் நீங்கள் எல்லாம் இவ்வளவு தூரம் உயர்ந்து இருக்க முடியுமா? ரசிகர்களை முதலில் மதிக்க கற்றுக் கொள்ளுங்கள் என்றெல்லாம் கண்டனங்கள் எழுந்து வருகின்றது. வேறு சிலரோ ரசிகர்களையும் திட்டி தீர்த்து வருகின்றனர். நீங்கள் காசு கொடுத்து படம் பார்த்து அவர்களை பெரிய ஆளாக்கி விடுகிறீர்கள். இறுதியில் அவர்களிடம் சென்று செல்பி எடுத்து இப்படி அவமானப்படுகிறீர்கள் என்று ரசிகர்களையும் சிலர் திட்டி வருகின்றனர். நீங்களும் அந்த வீடியோவை காண கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!

 

YouTube Video Embed Code Credits: Viral Videos 3.O

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்