அமரன் படக்குழுவினரை நேரில் அழைத்து பாராட்டிய நடிகர் ரஜினிகாந்த்..!

தமிழ் சினிமாவில் தொகுப்பாளராக வாழ்க்கையை தொடங்கி இன்று உச்ச நட்சத்திரமாக உருவெடுத்து இருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவரின் கடின உழைப்புக்கு கிடைத்த ஊதியமே இவர் சினிமாவில் ஜொலிப்பது எனலாம். தொடர்ந்து நல்ல படங்களை கொடுத்து சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை தனக்கான கூட்டத்தை சினிமாவில் உருவாக்கி உள்ளார்.

அமரன் படக்குழுவினரை நேரில் அழைத்து பாராட்டிய நடிகர் ரஜினிகாந்த்..! 1

விளம்பரம்

இவருக்கு அடுத்ததாக இயக்குனர் ராஜ்குமார் இயக்கத்தில்,கமல்ஹாசன் தயாரிப்பில் அமரன் படம் வெளியாக உள்ளது. கதாநாயகியாக சாய்பல்லவி நடித்து உள்ளார். ஜிவி பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்து உள்ளார். தீபாவளியை முன்னிட்டு இப்படம் திரையரங்குகளில் நேற்று வெளியாகி இருக்கிறது.ரசிகர்கள் இப்படத்திற்கு பெரும் ஆதரவுகளை தெரிவித்து வருகின்றனர். அதேபோல் படத்திற்கு நல்ல விமர்சனமும் ரசிகர்களிடம் இருந்து கிடைத்து உள்ளது.

அமரன் படக்குழுவினரை நேரில் அழைத்து பாராட்டிய நடிகர் ரஜினிகாந்த்..! 3

விளம்பரம்

தற்போது இப்படத்தினை பார்த்த நடிகர் ரஜினிகாந்த் படக்குழுவினரை நேரில் அழைத்து பாராட்டி உள்ளார். மேலும் படம் மிகவும் அருமையாக இருப்பதாகவும் தனது வாழ்த்துக்களை இயக்குனர்,சிவகார்த்திகேயன் மற்றும் கமல்ஹாசனுக்கு தெரிவித்து உள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது.

விளம்பரம்

Leave a Comment