Categories: அரசியல்

ஜிப்மர் விஷயத்தில் இரட்டை வேடம் போடும் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், மவுனம் காக்கும் முதல்வர் ரங்கசாமி – புதுவை முன்னாள் முதல்வர் நாராயணசாமி

வெளியிட்டது

அண்மையில் ஜிப்மரில் அலுவல் மொழியாக ஹிந்தி என அறிவிக்கப்பட்டிருந்தது. பல்வேறு தரப்பில் இருந்தும் இதற்கு எதிர்ப்புகள் எழுந்துள்ளது. இதனை குறித்து புதுவை முன்னாள் முதல்வர் நாராயணசாமி செய்தியாளகர்ளிடம் பேசியுள்ளார்.

புதுச்சேரியில் நாராயணசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “‘ஜிப்மரில் இனி இந்திதான் பிரதான மொழியாக வரப்போகிறது. அதற்காகத்தான் ஜிப்மரில் இந்தி திணிப்பு நடந்துள்ளது. மருந்து பதிவு செய்வது, நோயாளிகளின் விவரக்குறிப்புகள் எல்லாம் முன்பு ஆங்கிலத்தில் இருந்தது. இனி அவை இந்தியில்தான் இருக்கும். புதுச்சேரியில் காங்கிரஸ் ஆட்சி இருந்த போது, மத்திய அரசு தேசிய கல்விக் கொள்கையை கொண்டு வந்தது. அதை எதிர்த்து நாங்கள் கடிதம் எழுதினோம். தற்போது ஆளுநர், ஜிப்மரில் ஆய்வு மேற்கொண்டு, முழுமையாக இந்தி மொழி இல்லை என்று தவறான தகவலை சொல்கிறார். தமிழுக்கு முக்கியத்துவம் கொடுப்பதாக சொல்கிறார். அவருடைய பெயர் தமிழிசை சவுந்தரராஜன். முரண்பாடாக இந்திக்கு ஆதரவாக இருக்கிறார். இதற்காக அவர் மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.

ஜிப்மர் விஷயத்தில் இரட்டை வேடம் போடும் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், மவுனம் காக்கும் முதல்வர் ரங்கசாமி - புதுவை முன்னாள் முதல்வர் நாராயணசாமி 1

புதுச்சேரியில் தமிழ்தான் பிரதான மொழி. இதை மீறி பாஜக இந்தியைத் திணிக்க நினைத்தால் அதை கொண்டு வர விடமாட்டோம் என்று முன்னாள் முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

கடந்த 15 நாட்களுக்கு முன்பு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசும்போது, ‘இந்தி மொழியில்தான்தான் முழுமையான ஆட்சி மொழி என்று பேசினார். இந்தியா முழுவதும் அதைக் கொண்டு வர நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள். அந்த அறிவிப்புக்கு பிறகுதான் அமித் ஷா புதுச்சேரிக்கு வந்தார். அவரது வருகைக்குகூட அமைச்சர்கள் இந்தியில்தான் வரவேற்பு பேனர் வைத்தார்கள். அவர் வந்து சென்ற பிறகுதான் மத்திய அரசு ஜிப்மருக்கு இந்தி குறித்த சுற்றறிக்கையை அனுப்பியுள்ளது, புதுச்சேரியில் இந்தி திணிப்பு நடக்கிறது. இங்கு இவ்வளவு பிரச்சினைகள், போராட்டங்கள் நடந்தாலும்  முதல்வர் ரங்கசாமி வாய்மூடி மவுனமாக இருக்கிறார். இந்தி திணிப்புக்கு ஆதரவாக இருக்கிறார். ஏதாவது பேசினால் முதல்வர் நாற்காலி பறிபோய்விடும். அந்தப் பயத்தில் மவுனமாக காக்கிறார். முதல்வர் ரங்கசாமி மக்களிடம் விளக்கம் அளிக்க வேண்டும்.

புதுச்சேரியில் தமிழ்தான் பிரதான மொழி. அடுத்துதான் ஆங்கிலம். பிறகு தெலுங்கு, பிரெஞ்சு, மலையாளம் போன்றவை இணைப்பு மொழியாக இருக்கிறது. இதை மீறி பாஜக இந்தியைத் திணிக்க நினைக்கின்றனர். ஆனால், அதை கொண்டு வர நாங்கள் விடமாட்டோம்.  இந்தி திணிப்பு அறிவிப்பை ஜிப்மர் இயக்குநர் ராகேஷ் அகர்வால் உடனடியாக திரும்பப் பெற வேண்டும்” என்று நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

சுபாஷினி

As someone who's watched the industry evolve over the years, I'm committed to bringing you the most authentic, insightful, and entertaining coverage of Tamil cinema, one story at a time. மகத்தான சாதனை புரிந்தவர்கள் யாவருமே, தோல்வி பல கடந்து வென்றவர்களே

வெளியிட்டது

புதிய செய்திகள்