
தமிழகத்தில் மாநிலங்களவை அமைச்சரவை கூட்டம் சென்னை தலைமை செயலகத்தில் முதல் அமைச்சர் பழனிசாமி தலைமையில் வருகிற 19ந்தேதி காலை 11 மணியளவில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் அனைத்து அமைச்சர்களும் கலந்து கொள்கின்றனர்.
துணை முதல் அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தமிழகத்திற்கு தேவையான முதலீடுகளை ஈர்ப்பதற்காக அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், நாளை இரவு அவர் சென்னை திரும்புகிறார். இந்த கூட்டத்தில் அவரும் கலந்து கொள்ள இருக்கிறார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன .
விளம்பரம்
இக்கூட்டத்தில் புதிய தொழில் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்குவது மற்றும் உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக ஆலோசனை மற்றும் முடிவுகள் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விளம்பரம்