நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர்! நாளை முதல் தொடக்கம்!!

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர்! நாளை முதல் தொடக்கம்!! 1

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் நாளை நடைபெற உள்ள நிலையில், டெல்லியில் அரசு தரப்பில் அனைத்துக் கட்சிக் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் உள்துறை மந்திரி அமித்ஷா, காங்கிரஸ் எம்.பி. குலாம்நபி ஆசாத், காங்கிரஸ், திரிணாமுல், பகுஜன் சமாஜ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் முன்னணி தலைவர்கள் பங்கேற்றிருந்தனர். குளிர்கால கூட்டத்தொடரை சுமுகமாக நடத்துவது குறித்து அனைத்து கட்சி கூட்டத்தின் தரப்பில் விவாதிக்கப்பட்டது.

இதனையடுத்து இந்த கூட்டத்தில் பேசிய எதிர்க்கட்சி தலைவர்கள், காஷ்மீரில் தடுப்பு காவல் சட்டத்தில் காவலில் இருக்கும் எம்.பி., பரூக் அப்துல்லாவை விடுவிக்க வேண்டும். அவரை நாடாளுமன்ற கூட்டத் தொடரில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழுப்பினார் .

விளம்பரம்

இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாக, மத்திய மந்திரி பிரகலாத் ஜோஷி கூறுகையில், கடந்த நாடாளுமன்ற கூட்டத் தொடரை போன்று இந்த கூட்டத்தையும் ஆக்கப்பூர்வமாக கொண்டு செல்ல வேண்டும். அனைத்து விஷயங்களையும் விதிகளுக்கு உட்பட்டு ஆலோசிக்கவும், விவாதிக்கவும் அரசு தயாராக உள்ளதாக அவர் தெரிவித்திருந்தார்.

தொடர்புடையவை  திருமணமாகி 20 ஆண்டுகளுக்கு பிறந்த மகள்.! பெயர் சூட்டு விழா நடத்திய ஜெயலலிதா அண்ணன் மகள் ஜெ. தீபா.!

மேலும் சிவசேனா குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த பிரகலாத் ஜோஷி, அனைத்து கட்சிக்கூட்டத்தில் பங்கேற்க சிவசேனாவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டது அவர்கள் பங்கேற்கவில்லை. சிவசேனா கட்சியை சேர்ந்த அரவிந்த் சாவந்த் ராஜினாமா செய்துள்ளார். அவர்கள் காங்கிரசுடன் இணைந்து பணியாற்ற விரும்புகிறார்கள், எனவே அவர்கள் எதிர்க்கட்சியில் அமர தேர்ந்தெடுத்திருக்கின்றனர். அதற்கு நாங்கள் ஒப்புக்கொண்டோம். மக்களவை, மாநிலங்களவையிலும் எதிர்க்கட்சியாக அமர அவர்களுக்கு நாங்கள் இருக்கையை ஒதுக்குகிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment