ஒரு ஏழை இப்படி கருப்பா குண்டா இருந்த கல்யாணம் பண்ணுவீங்களா? வறுத்து எடுத்த நெறியாளர்

சமீபத்தில் திருமணம் செய்து கொண்ட சினிமா தயாரிப்பாளர் ரவீந்தர் நிரூபர் ஒருவரிடம் மாட்டிக் கொண்டு முழிக்கும் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. கடந்த ஒரு வாரமாக சமூக வலைத்தளங்களில் பேசு பொருளாக இருக்கும் ஒரு திருமணம்தான் தயாரிப்பாளர் ரவீந்திரன் மற்றும் சின்னத்திரை நடிகை மகாலட்சுமி திருமணம். இவர்கள் இருவரும் சத்தமில்லாமல் திருப்பதியில் வைத்து திருமணம் செய்து கொண்டது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இந்த திருமணத்திற்கு திரையுலகினர் யாரையும் அழைக்காமல் தங்களது குடும்பத்தினரை மட்டும் வைத்து எளிய முறையில் திருப்பதி கோவிலில் வைத்து இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இது ரவீந்தர் மற்றும் மகாலட்சுமி இருவருக்குமே இரண்டாவது திருமணம் தான். ரவீந்தரை தயாரிப்பாளராக தெரிந்ததை விட பிக்பாஸ் விமர்சகராகவே பலருக்கும் தெரியும். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஒரு ஏழை இப்படி கருப்பா குண்டா இருந்த கல்யாணம் பண்ணுவீங்களா? வறுத்து எடுத்த நெறியாளர் 1

விளம்பரம்

இந்த நிலையில் இருவரும் தொடர்ந்து மீடியாக்களில் பேட்டி கொடுத்த வண்ணம் இருக்கின்றனர். மஹாலெட்சுமி கூறும் போது தான் பணத்திற்காக ரவீந்தரை திருமணம் செய்து கொள்ளவில்லை, அன்புக்காக தான் திருமணம் செய்தெ கொண்டேன் என்று விளக்கமளித்துள்ளார். ஆனாலும் பலரும் தொடர்ந்து பணத்திற்காகதான் திருமணம் செய்து கொண்டார் என்று மஹாலெட்சுமி மீது விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது இருவரும் இன்னொரு சேனலில் பேட்டி ஒன்றை அளித்துள்ளனர். சத்தியம் தொலைக்காட்சியில் முக்தர் என்ற ஒரு நிரூபரிடம் இருவரும் மாட்டிக் கொண்டு உள்ளனர். முக்தர் அரசியல்வாதிகளை துளைத்து துளைத்து கேள்வி கேட்பவர். அவரிடம் இருவரும் பேட்டி கொடுக்க சென்றுள்ளனர். அதன் ப்ரோமோ தற்போது வெளியாகியிருக்கிறது.

தொடர்புடையவை  வெளியான புது ப்ரோமோ.. வலிமை அப்டேட் | Valimai Promo 2 | Ajith Kumar | Yuvan Shankar Raja | H Vinoth | 24 Feb

ஒரு ஏழை இப்படி கருப்பா குண்டா இருந்த கல்யாணம் பண்ணுவீங்களா? வறுத்து எடுத்த நெறியாளர் 3

விளம்பரம்

அந்த பேட்டியில் முக்தர், ரவீந்தர் மற்றும் மகாலட்சுமியிடம் பல கேள்விகளை கேட்கிறார். குறிப்பாக நீங்கள் பணத்திற்காக தானே திருமணம் செய்து கொண்டீர்கள்? இப்படி கருப்பாக குண்டாக ஒரு ஏழை இருந்தால் அவரை நீங்கள் திருமணம் செய்து கொள்வீர்களா? போன்ற பல கேள்விகள் அவரிடம் கேட்கப்படுகிறது. அந்த வீடியோவை நீங்களும் காண..

விளம்பரம்

 

விளம்பரம்

Leave a Comment