ஆர் ஜே பாலாஜி மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் “ரன் பேபி ரன்” திரைப்படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியிருக்கிறது. இந்த படம் வருகிற பிப்ரவரி 3ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் தற்போது ட்ரெய்லரை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு இருக்கிறது படக்குழு. ரேடியோ பண்பலையில் நிகழ்ச்சி தொகுப்பாளராக தனது வாழ்க்கையை தொடங்கியவர் ஆர் ஜே பாலாஜி. பின்னர் இவர் நடிப்பின் மீது இருக்கும் ஆர்வத்தின் காரணமாக திரைத்துறைக்கு வந்தார். 2013 ஆம் ஆண்டு எதிர்நீச்சல் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்த பின்னர் நானும் ரவுடிதான் படத்தில் காமெடி ரோலில் விஜய் சேதுபதியின் நண்பராக நடித்த அசத்தியிருந்தார். இந்த படம் இவருக்கு திருப்புமுனையாக அமைந்தது. பின்னர் பல படங்களில் நடித்த அவர் மூக்குத்தி அம்மன், எல்கேஜி, வீட்ல விசேஷம் போன்ற சில படங்களில் ஹீரோவாகவும் நடித்திருக்கிறார். தற்போது சிங்கப்பூர் சலூன் மற்றும் ரன் பேபி ரன் ஆகிய இரு படங்களில் நடித்து வருகிறார். ட்ரெய்லர் வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இதில் ஆர் ஜே பாலாஜி நடிக்கும் சிங்கப்பூர் சலூன் படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியாகி இருந்தது. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டு அந்த படத்தின் அறிவிப்பை வெளியிட்டிருந்தார் ஆர்.ஜே.பாலாஜி. இந்த நிலையில் பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரன் பேபி ரன் என்கிற படத்தின் அறிவிப்பை சில மாதங்களுக்கு முன்பு வெளியிட்டிருந்தார். இந்த படத்தில் ஆர் ஜே பாலாஜி உடன் இணைந்து ஐஸ்வர்யா ராஜேஷ், ராதிகா, விவேக் பிரசன்னா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். திரில்லர் ஜானரில் உருவாகி இருக்கும் இந்த படத்தை சாம் சி எஸ் இசையமைத்திருக்கிறார். இயக்குனர் ஜெயின் கிருஷ்ணகுமார் இந்த படத்தை இயக்கியிருக்கிறார். இந்த படம் வருகிற பிப்ரவரி 3ஆம் தேதி உலகம் எங்கிலும் உள்ள திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தற்போது படத்தில் இருந்து ட்ரெய்லர் வீடியோவை வெளியிட்டு இருக்கிறது படக்குழு.
ட்ரைலலர் வீடியோவை பார்க்கும் பொழுது ஆர்ஜே பாலாஜி ஒரு சிக்கலில் மாட்டிக் கொள்வதாக தெரிகிறது. அதிலிருந்து அவர் எவ்வாறு மீண்டு வருகிறார் என்பதை த்ரில்லிங் கதையில் விளக்கும் படமாக இது இருக்கும் என்று தெரிகிறது. நீங்களும் அந்த ட்ரைலர் வீடியோவை காண..! கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!
Youtube Video Code Embed Credits: Saregama Tamil