ஜெயிலர் படத்தில் இணைந்த முன்னணி நடிகை.! போட்டோவுடன் அதிகாரபூர்வமாக அறிவித்த படக்குழு.!

ஜெயிலர் படத்தில் முக்கிய நடிகை ஒருவர் இணைந்து உள்ள செய்தியை தற்போது படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தமிழ் உலகின் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். இவர் 1975 ஆம் ஆண்டு வெளியான அபூர்வ ராகங்கள் என்கிற படத்தின் மூலமாக திரைத்துறைக்கு அறிமுகமானார். இவரை திரைத்துறைக்கு கொண்டு வந்தது இயக்குனர் சிகரம் கே பாலச்சந்தர் தான். அன்று தொடங்கி இன்று வரை 50 ஆண்டுகளில் சுமார் 168க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து முடித்து இருக்கிறார் ரஜினிகாந்த். இவர் தற்போது தனது 169 வது படமான ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் ரஜினியின் 73வது பிறந்த நாளை முன்னிட்டு குட்டி டீஸர் ஒன்றை வெளியிட்டு படக்குழு வாழ்த்தியிருந்தது. அதில் முத்துவேல் பாண்டியன் வருகிறார் என்று ரஜினியின் கதாபாத்திரத்தை அறிவித்து இருந்தனர்.

ஜெயிலர் படத்தில் இணைந்த முன்னணி நடிகை.! போட்டோவுடன் அதிகாரபூர்வமாக அறிவித்த படக்குழு.! 1

விளம்பரம்

அந்த டீசரில் ஒரு அறையில் ஜன்னல்கள் மட்டும் திறந்து இருக்கிறது. அதன் வழியாக சிறிது வெளிச்சம் வருகிறது. கால் மேல் கால் போட்டு சூப்பர் ஸ்டார் அமர்ந்திருக்கிறார். பின்னர் அவர் தனது மூக்கு கண்ணாடியை அணிந்து கொண்டு வீட்டிலிருந்து வெளியே வந்து பட்டா கத்தியை எடுத்து திரும்பி பார்க்கிறார். அப்போது க்யூட்டாக சிரிக்கிறார். அந்த டீசரை பார்த்த பின்பு பக்கா மாஸாக தலைவர் கலக்க இருக்கிறார் என்று ரசிகர்கள் கொண்டாடி வந்தனர். இந்த படத்தை நெல்சன் திலீப் குமார் இயக்க சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த படத்தில் யோகி பாபு, ரம்யா கிருஷ்ணன் என பல முன்னணி நடிகர்கள் நடித்து வருகின்றனர். இந்த நிலையில் ரஜினிக்கு ஜோடியாக யார் நடிக்க இருக்கிறார்கள் என்ற எதிர்பார்ப்பு எகிறி இருந்தது. பலரும் பலரின் பெயர்களை கூறி வந்தனர்.

தொடர்புடையவை  உன் அழகில் என் இதயம்..! தோழி திருமண விழாவில் கலந்துகொண்ட நடிகை Samantha..! ஆளை மயக்கும் புகைப்படங்கள் இதோ..!

ஜெயிலர் படத்தில் இணைந்த முன்னணி நடிகை.! போட்டோவுடன் அதிகாரபூர்வமாக அறிவித்த படக்குழு.! 3

விளம்பரம்

இந்த நிலையில் இன்று சன் டிவி அதிகாரபூர்வமாக நடிகையை அறிவித்துள்ளது. அதில் தமன்னா இந்த படத்தில் நடிகையாக அறிமுகம் ஆகியுள்ளார் என்று அறிவிப்பை வெளியிட்டுள்ளது படக்குழு. ஜெயிலர் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து தமன்னாவின் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளது. இதனால் ரஜினி ரசிகர்கள் மிகுந்த குஷியில் இருக்கின்றனர். முதல் முறையாக ரஜினியுடன் இணைந்து தமன்னா நடிக்க இருப்பதால் அவரின் ரசிகர்களும் மிகுந்த குஷியில் இருக்கின்றனர்.

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment