விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியல் பாகம் 1-ல் நடித்து வந்த அருண்பிரசாத் தற்போது அதே தொலைக்காட்சியில் வேறு சேனலுக்கு தாவி இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. இது எந்த அளவிற்கு உண்மை என்பதை தெரியவில்லை. பல இல்லத்தரசிகளின் மனம் கவர்ந்த தொடராக விஜய் தொலைக்காட்சியில் கடந்த மூன்று ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வந்தது பாரதி கண்ணம்மா, குடும்பத் தலைவிகளின் ஆதரவு பெற்ற இந்த தொடர் கடந்த வாரம் நிறைவடைந்தது. இதனால் இந்த தொடரின் ரசிகர்கள் பலரும் சோகத்தில் இருந்தனர். ஆனால் அவர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக பாரதி கண்ணம்மா சீசன் 2 வின் பாகம் 2 உடனடியாக துவங்கப்பட்டுள்ளது. நேற்று இரவு 9 மணி முதல் பாரதி கண்ணம்மா சீசன் 2 ஒளிபரப்பாகி வருகிறது. இதனால் இந்த தொடரின் ரசிகர்கள் ஏகத்துக்கும் குஷியில் இருக்கிறார்கள். இந்த தொடரிலும் கண்ணம்மாவாக வினுஷா தேவியே நடிக்கிறார்.

சீசன் 2விலும் பாரதியாக அருண் பிரசாத்தே நடிப்பார் என்று எதிர்பார்த்து இருந்த நிலையில் அவர் நடிக்கவில்லை. சன் டிவியில் ரோஜா சீரியலில் அர்ஜுன் கதாபாத்திரத்தில் நடித்து வந்த சிபு சூரியன் பாரதியாக என்ட்ரி கொடுத்தார். தொலைக்காட்சி தொடர்களுக்கு பெயர் போன சன் டிவியில் நீண்ட வருடங்களாக ஒளிபரப்பாகி வந்தது ரோஜா தொடர். இந்த தொடரில் சிபு சூரியன் கதாநாயகனாகவும், பிரியங்கா நல்காரி கதாநாயகியாகவும் நடித்து வந்தனர். இவர்கள் இருவரும் செய்யும் ரொமான்ஸ் காட்சிகளுக்காகவே இந்த நாடகத்தை பல இல்லத்தரசிகளும் விரும்பி பார்க்க தொடங்கினர். ஆனால் இந்த சீரியலும் எதிர்பாராத நிலையில் முடிவடைந்த காரணத்தினால், மீண்டும் ரோஜா பாகம் 2 எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சிபு சூரியனும் பிரியங்கா நல்காரியும் சன் டிவியில் இருந்து விலகி வேறு வேறு சேனலுக்கு சென்று விட்டனர். பிரியங்கா ஜீ தமிழில் ஒளிபரப்பாக உள்ள சீதாராமன் தொடரிலும், சிபு சூரியன் பாரதி கண்ணம்மாவிலும் நடிக்க வந்துவிட்டனர்.
ஆனால் பாரதி கண்ணம்மா ரசிகர்கள் பலருக்கும் சிபு சூரியனை பாரதியாக ஏற்றுக் கொள்ள மனமில்லை. பலரும் அருண் பிரசாத்தையே மீண்டும் பாரதியாக கொண்டு வாருங்கள் என்று கமெண்ட்களில் கூறி வருகின்றனர். இந்த நிலையில் தற்போது அருண் பிரசாத் விஜய் டிவியில் வேறு ஒரு தொடரில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. ஆனால் இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என்பதை தெரியவில்லை. ஈரமான ரோஜாவே பாகம் இரண்டு சீரியல் விறுவிறுப்பாக நடைபெற்ற வருகிறது. அந்த சீரியல் ஷூட்டிங் ஸ்பாட்டில் அந்த நடிகர்களுடன் இவர் எடுத்துக் கொண்ட புகைப்படம் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. இதனால் இவர் ஈரமான ரோஜாவே சீரியலில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியானது. ஆனால் இந்த தகவலில் உண்மை இல்லை. அவர் பாரதி கண்ணம்மா சீரியலில் நடித்துக் கொண்டிருந்தபோது அதே ஷூட்டிங் ஸ்பாட்டில் ஈரமான ரோஜாவே சீரியலும் எடுக்கப்பட்டிருந்தது. அப்போது அவர்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் என்பது தெரியவந்துள்ளது.
பாரதிகண்ணம்மா கிளைமாக்ஸ் போது அவர் தலையில் கட்டு போட்டு இருந்தார். அதே லுக்கில் அவர் அந்த புகைப்படத்தை எடுத்து இருக்கிறார். இதனால் பாரதியின் புது சீரியல் என்ட்ரி குறித்து பரவும் தகவலில் எந்த விதமான உண்மையும் இல்லை என்பதும் தெரியவந்துள்ளது.