விஜய் டிவியின் நகைச்சுவை நடிகராக இருக்கும் பாலாவிற்கு தற்போது பிரபல யூட்யூப் நிறுவனம் ராயல் என்ஃபீல்டு ரக பைக் ஒன்றை பரிசாக அளித்திருக்கிறது. அதை வீடியோவாக வெளியிட்டு பாலா தற்போது அந்த நிறுவனத்திற்கு நன்றியையும் தெரிவித்திருக்கிறார் பாலா. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியில் காமெடியனாக கலந்து கொண்டவர் பாலா் இவர் ஆரம்பத்தில் பல அவமானங்களை சந்தித்து இன்று இந்த உயரத்திற்கு வந்திருக்கிறார். பாலா ஆரம்பத்தில் வேலை தேடி அலைந்த போது அவர் முகத்தில் சுடுதண்ணீரையெல்லாம் ஊற்றி அவமானப்படுத்தி இருக்கிறார்கள். ஆனால் அதை எல்லாம் தாங்கிக்கொண்டு இன்று தமிழ்நாடே தெரிந்த ஒரு முகமாக பாலா இருக்கிறார் என்று சொன்னால் அதற்கு அவரது அயராத உழைப்பு தான் காரணம். இவருக்கு திருப்புமுனையாக அமைந்த ஒரு நிகழ்ச்சி என்று சொன்னால் அது குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான். இந்த நிகழ்ச்சியில் கோமாளியாக மூன்று சீசன்களாக கலந்து கொண்டார் பாலா. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் பாலாவிற்கு ரசிகர் பட்டாளம் மிகப்பெரிய அளவில் பெருகியது. பாலாவும் ரித்திகாவும் சேர்ந்து கொண்டு செய்த காமெடிகள் மிகப் பிரபலமானது. இதன் பின்னர் பாலாவுக்கு படங்களில் நடிக்கும் வாய்ப்பும் கிடைத்தது. விஜய் சேதுபதி படத்திலும் மற்றும் சில படங்களிலும் கமிட்டாகி நடித்து வருகிறார் பாலா. மேலும் யாராவது ஒரு கவுண்ட்டர் அடித்தால் அதற்கு பதில் கவுண்ட்டர் சொல்வதில் கைதேர்ந்தவராக இருக்கிறார். அந்த டைமிங்க்காகவே அவரை பலரும் ரசிக்க தொடங்கினர். அதற்காக அவர் மிகவும் சிரமப்பட்டு இரவு பகல் பாராமல் ஸ்கிரிப்ட் எழுதி தன்னைத்தானே தயார் படுத்திக் கொண்டார். அந்த தயாரிப்பு தான் இன்று இவர் இந்த அளவிற்கு உயர்வதற்கு ஒரு காரணமாக அமைந்திருக்கிறது. தற்போது பாலா சமூக வலைதள பக்கங்களில் ஆக்டிவாக ஏதாவது ஒரு வீடியோ அல்லது புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார். அந்த வகையில் அவர் இன்று ஒரு வீடியோவை வெளியிட்டு இருக்கிறார். அதில் பிரபல தனியார் youtube நிறுவனம் ஒன்று பாலாவிற்கு உயர்ரக ராயல் என்ஃபீல்டு பைக்கை பரிசாக வழங்கியிருக்கிறது.

அந்த வீடியோவை பகிர்ந்த பாலா பெட்ரோல் இல்லாமல் பைக்கை தள்ளிட்டு போன தனக்கு புல்லட் கொடுத்த அந்த நிறுவனத்திற்கு நன்றி என்றும், தான் ஓட்டும் முதல் பிரெஷ் பைக் என்றும் எப்பொழுதும் இரண்டாவதாக செகண்ட் ஹேண்டில் தான் பைக் வாங்குவேன். தற்போது எனக்கு முதல் முறையாக பைக் வழங்கிய அந்த நிறுவனத்திற்கு நன்றி லவ் யூ லாட்ஸ் மக்களே என்று பதிவிட்டு இருக்கிறார். அந்த பதிவிற்கு கீழே பலரும் பாலாவிற்கு வாழ்த்துக்களை தெரிவித்து கமெண்ட் போட்டு வருகின்றனர். மேலும் அந்த பதிவு 3 லட்சத்திற்கும் அதிகமான லைக்குகளை குவித்து இருக்கிறது. மேலும் அந்த வீடியோவை மட்டும் 23 லட்சம் மக்கள் பார்த்து ரசித்து இருக்கின்றனர். அந்த வீடியோவை நீங்களும் காண.! கீழே இருக்கும் வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!
Youtube Video Code Embed Credits: Viral Videos 3.O