தற்போது தான், வாரிசு படத்தை பார்த்ததாகவும் எமோஷனல் காட்சிகளில் இதயபூர்வமாக அழுதுவிட்டேன் என்றும் என் மனதில் இருந்து விஜய் அண்ணாவிற்கு நன்றி தெரிவிக்கிறேன் என்றும் இசையமைப்பாளர் தமன் தற்போது ட்வீட் செய்து இருக்கிறார். அந்த பதிவு தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. தமிழ் உலகின் முன்னணி நடிகராக இருக்கும் தளபதி விஜயின் 66-வது படமாக உருவாகி இருக்கிறது வாரிசு திரைப்படம். இந்த திரைப்படம் தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் உருவாகி இருக்கிறது. இந்த படத்தை வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் தில் ராஜு தயாரித்திருக்கிறார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருக்கிறார். மேலும் வில்லனாக பிரகாஷ்ராஜும், பிரபு, சரத்குமார், குஷ்பூ, யோகி பாபு உள்ளிட்ட பலர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைத்திருக்கிறார். விஜய் படத்திற்கு முதன்முறையாக இசையமைக்கும் வாய்ப்பை பெற்றிருக்கிறார் தமன்.

இந்த நிலையில் வாரிசு படம் வருகிற ஜனவரி 11ஆம் தேதி (நாளை) திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. அஜித்தின் துணிவு படத்துடன் இந்த படம் நேரடியாக மோத இருக்கிறது. ஏற்கனவே படத்திலிருந்து தீ தளபதி, ரஞ்சிதமே, சோல் ஆஃப் வாரிசு போன்ற பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று இருந்த நிலையில், கடந்த வாரம் படத்தின் டிரைலர் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பு பெற்று வருகிறது. இந்த ட்ரெய்லரை பார்க்கும்போது ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த படமாக இது இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயம் குடும்பம், அம்மா சென்டிமென்ட் என்று சென்டிமென்ட் காட்சிகள் நிறைந்த படமாகவும் வாரிசு இருக்கும் என்று எதிர்பார்க்கபடுகிறது. அதேபோல் தற்போது இசையமைப்பாளர் தமன் படத்தை பார்த்துவிட்டு தனது முதல் விமர்சனத்தை கூறி இருக்கிறார். அதில் அவர் பல தகவல்களை பகிர்ந்து இருக்கிறார். விட்டரில் பதிவிட்டுள்ள அவர், வாரிசு படத்தைப் பார்த்துக் கொண்டிருந்தபோது என்னுடைய இதயத்தில் இருந்து பல இடங்களில் அழுதேன்.

இந்தப் படம் என்னுடைய குடும்பம் போன்றது. என் மனதிற்கு மிக நெருக்கமானது. இந்த வாய்ப்பை கொடுத்த விஜய் அண்ணாவிற்கு மிக்க நன்றி. லவ் யூ அண்ணா. நாளை முதல் இந்த படம் பிளாக்பஸ்டர் ஆகும் என்று விஜயுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து இசையமைப்பாளர் தமன் பதிவிட்டு இருக்கிறார். அந்தப் பதிவை பார்த்த பலரும் வேகமாக ஷேர் செய்து வருகின்றனர். மேலும் நீண்ட நாட்களுக்குப் பிறகு விஜய் ஆக்ஷன், சென்டிமென்ட், காதல், காமெடி என்று அனைத்திலும் கலக்கி இருப்பதாகவும் அவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Anna @actorvijay Anna ❤️
I cried From the Heart Watching all the Emotional Scenes dear anna ❤️ Tears Are Precious 🥹#Varisu Movie Is My family Anna It’s Close To My heart ❤️ Thanks For Giving me This biggest Opportunity dear Anna Love U 🎛️🎧🥁#BlockbusterVarisu FROM TOM 😊 pic.twitter.com/QgZdOdGR9G
— thaman S (@MusicThaman) January 10, 2023