ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இரவின் நிழல் படம்.! மகிழ்ச்சியின் உச்சியில் பார்த்திபன்.!

2023 ஆம் ஆண்டிற்கு ஆஸ்கார் விருதுக்கு 10 இந்திய படங்களை தேர்ந்தெடுத்து ஆஸ்கர் குழுபரிந்துரை செய்துள்ளது. அதில் பார்த்திபன் இயக்கிய இரவின் நிழல் படமும், சமீபத்தில் வெளியாகி கோடிகளில் வசூலை அள்ளிய காந்தாரா திரைப்படமும் இடம் பெற்றுள்ளது. உலகளவில் உயரிய விருதாக கருதப்படுவது ஆஸ்கார் விருது. இந்த விருது வழங்கும் விழா ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் வருகிற 95வது ஆஸ்கார் விருது வழங்கும் விழா மார்ச் 2023 ஆம் ஆண்டு நடைபெற இருக்கிறது. இதற்காக பல படங்கள் போட்டி போடும் நிலையில், 301 படங்களை ஆஸ்கார் குழுவினர் பரிந்துரை செய்துள்ளது. தற்போது அந்த பட்டியல் விவரம் வெளியாகியிருக்கிறது. அதில் இந்திய திரைப்படங்களில் இருந்து மொத்தம் 10 படங்கள் தேர்வாகி இருக்கிறது. இதில் தமிழ் இயக்குனர்கள் இயக்கிய இரவின் நிழல் படமும், ராக்டெரி நம்பி விளைவு படங்களும் தேர்வாகி இருக்கிறது. அந்த மகிழ்ச்சியான செய்தியை பார்த்திபனே தனது சோஷியல் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்.

ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இரவின் நிழல் படம்.! மகிழ்ச்சியின் உச்சியில் பார்த்திபன்.! 1
மேலும் ராஜமவுலி இயக்கிய ஆர் ஆர் ஆர், ரிஷப் ஷெட்டி இயக்கிய காந்தாரா திரைப்படம், பார்த்திபனின் இரவின் நிழல் திரைப்படம், மாதவன் இயக்கி நடத்த ராக்கெட்ரி நம்பி விளைவு படம், கங்குபாய், காஷ்மீர் பைல்ஸ் ஆகிய ஹிந்தி திரைப்படங்களும், குஜராத்தி படமான தி செல்லோ ஷோ போன்ற படங்களும் பரிந்துரை பட்டியலில் இடம் பெற்று இருக்கின்றன. இவற்றுடன் சேர்த்து மீ வசந்த்ராவ், தி நெக்ஸ்ட் மார்னிங், விக்ராந்த் ரோனா ஆகிய 10 படங்கள் ஆஸ்கரின் பரிந்துரை பட்டியலில் இடம் பெற்றுள்ளன. இந்த நிலையில் ஆஸ்கர் பரிந்துரை பட்டியலில் இரவின் நிழல் படம் இடம் பெற்று இருப்பதை தனது ஷோசியல் மீடியா பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருக்கிறார் இயக்குனர் பார்த்திபன். அவர் கூறியுள்ளதாவது அந்த மகா சமுத்திரத்தில் இந்த எளியவனின் படம் எலிஜிபில் லிஸ்ட் வரை வந்ததே வரம் தான். ஆர் ஆர் ஆர் படங்கள் கோடி ரூபாய் செலவழித்து பிரச்சாரம் செய்துள்ள நிலையில் தனது படம் எந்த காசும் செலவழிக்காமல் பட்டியலில் வந்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

விளம்பரம்
தொடர்புடையவை  சின்ன பயலே, ஓரமா போய் கிரிக்கெட் விளையாடு..ரிஷப் பண்டை அசிங்கப்படுத்திய அண்ணாச்சி பட ஹீரோயின்

ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இரவின் நிழல் படம்.! மகிழ்ச்சியின் உச்சியில் பார்த்திபன்.! 3

இதுகுறித்து சோசியல் மீடியா பக்கத்தில் பதிவிட்டுள்ள பார்த்திபன், *Oscars eligible list-ல் மட்டுமே‘இரவின் நிழல்’ இருக்கிறது.ஆனால்,
RRR – Oscars short list-லேயே இருக்கிறது.வெற்றி வாய்ப்பும் வெளிச்சமாகவே இருப்பது நமக்கெல்லாம் பெருமையே! ஆனால் அதற்காக (அப்படத்திற்கு மட்டுமல்ல எல்லா ஹாலிவுட் படங்களுக்கும் கூட) மிகப் பெரிய செலவில் அங்கிருக்கும் agency மூலம் campaign செய்யப்படுவது (சினிமா )உலகறிந்த உண்மை. திரு ராம், திரு விக்னேஷ் சிவன், திரு வெற்றிமாறன் போன்றவர்களிடம் கேட்டுப் பார்த்தால் (the budget of oscars was more than the budget of visaranai) தெரியும். RRR- pan indian film என்ற (மா)வட்டத்தை எல்லாம் தாண்டி உலக அரங்கின் கவனம் ஈர்த்திருப்பது நாம் கௌரவத்துடன் கொண்டாடப் படவேண்டியது. அப்படிப்பட்ட மதிப்பு வாய்ந்த படத்திற்கே பல கோடிகளில் campaign செய்ய வேண்டியுள்ளது. பெரும் பட்ஜெட் மாபெரும் கலக்‌ஷன் வந்த படத்திற்கு அந்த செலவு சிறிது. ஆனால் அந்த அங்கீகாரம் அவசியம். அவ்வசியத்திற்கு தேவையான மை (டாலரில் ரூபாய்) கைவசம் இல்லாத்தால் ஒருமுறை இரவின் நிழல்spl screening செய்ய 5 லட்சம் கேட்டும் அப்படி எந்த spl-ம் இந்த முறை வேண்டாம்.(சென்ற முறை‘ஒத்த செருப்பு’க்கு நானே ரசூலுடன் los angles சென்று 15,20 லட்சம் loss செய்து screening செய்து பத்து பேரையாவது பார்க்க வைத்து போராடினேன்) எனக் கூறிவிட்டேன்.

விளம்பரம்
தொடர்புடையவை  லேடி ரோலக்ஸ் ஆகிறார் சமந்தா..லோகேஷ் செய்ய இருக்கும் தரமான சம்பவம்..தளபதி 67 படம் பற்றி வெளியான புது அப்டேட்

ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இரவின் நிழல் படம்.! மகிழ்ச்சியின் உச்சியில் பார்த்திபன்.! 5

அப்படியிருந்தும் “அப்படியா? லிஸ்ட்டில் நம் பெயர் உள்ளதா?” என்ற ஆச்சர்யமே ஆனந்தமே! விருதின் மதிப்பறிந்தவன் நான் என்பதால், RRR-ன் உச்சபட்ச மதிப்பறிந்தவன். குறைவாக மதிப்பிட்டால் அது என்னையே குறைத்து மதிப்பிடுதலுக்கு சமம்! “உலகத்தில பணத்தை விட பெரிய விஷயம் நிறைய இருக்கு,ஆனா அது எல்லாத்தையும் பணத்தை வைச்சுதான் வாங்க முடியும்” இது இரவின் நிழல் விசன வசனம்! Campaign என்பது பணம் செலவழித்து அப்படைப்பை சம்மந்தப்பட்டவர்களின் கண்களுக்குள் கவனமென்னும் லென்ஸை பொறுத்துவது போன்றது. ஆனால் விருதென்பது அப்படைப்பின் தகுதியை பொறுத்தது. தகுதியுடன் முக்கால் உயரம் தொட்டிருக்கும் RRR உச்சம் தொடவதும் விருது பெறவதும் நமக்கெல்லாம் பெருமையே! என்று பதிவிட்டு இருக்கிறார்.

விளம்பரம்

ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இரவின் நிழல் படம்.! மகிழ்ச்சியின் உச்சியில் பார்த்திபன்.! 7

மேலும் காந்தாரா திரைப்படம் இரண்டு பிரிவுகளில் ஆஸ்கர் விருதுக்கு தகுதி பெற்றுள்ளது குறிப்பிட்டுள்ள ஹோம்பாலே பிலிம்ஸ் நிறுவனம், அதற்காக நன்றியையும் தெரிவித்து இருக்கிறது. தங்களுக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி என்றும் இந்த பயணம் அடுத்த கட்டத்தும் செல்வதற்கு ஆவலோடு காத்திருப்பதாகவும் அவர்கள் பதிவிட்டு இருக்கின்றனர். இந்த செய்தியை கேட்ட பார்த்திபன் ரசிகர்கள் பார்த்திபனுக்கு தங்களுடைய வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment