விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மௌனராகம் தொடர் விரைவில் முடிவடைய இருப்பதாக தற்போது தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை. ஆனால் விரைவில் கிளைமாக்ஸ் காட்சிகள் ஒளிபரப்பப்பட இருப்பதாக தற்போது தகவல்கள் வெளியாகி இருக்கிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி பலரின் மனம் கவர்ந்த தொடராக இருப்பது மௌன ராகம். இந்த தொடர் சீசன் 1 கொடுத்த மிகப்பெரிய வெற்றியால் தற்போது சீசன் 2 எடுக்கப்பட்டு வருகிறது. இந்த சீசன் 2வில் ரவீனா தாஹா, ஷில்பா, ராகுல், சல்மான் சிப்பி ரஞ்சித் என பலரும் நடித்து வருகின்றனர். இதில் சக்தியாக ரவீனாவும் கார்த்திக் கிருஷ்ணாவாக ராஜு பரமேஸ்வரன், மல்லிகாவாக சிப்பி ரஞ்சித்தும், ஸ்ருதியாக ஷில்பாவும் நடித்து வருகின்றனர். இதில் அண்ணன் தம்பிகளாக சல்மான் வருணாகவும், ராகுல் தருணாகவும் நடித்து வருகின்றனர். இந்த கதை தற்போது விறுவிறுப்பான கட்டங்களை எட்டி வருகிறது .

இந்தத் தொடரை மக்கள் விரும்பி பார்ப்பதற்கு முக்கிய காரணம் என்றால் ஏதாவது ஒரு திருப்பம் என்றால் அதை உடனடியாக உடைத்து விட்டு கதை அடுத்தடுத்த கட்டத்திற்கு நகர்ந்து சென்று விடும். ஒரே இடத்தில் தேய்ந்த ரெகார்ட் போன இல்லாமல் கதையை விறுவிறுப்பாக கொண்டு செல்வதில் கவனம் செலுத்தி வருகிறார் இயக்குனர். தற்போது கதைப்படி கோவிலுக்கு வைத்திருந்த நகைகளை ஸ்ருதி திருடி விடுகிறார். அதை பத்திரமாக பார்த்துக் கொள்ள வேண்டிய சக்தி மீது மாமியார் கோபத்துடன் இருக்கிறார். இதை எப்படியாவது கண்டுபிடித்து மீண்டும் நகைகளை கோவிலில் சேர்த்து விட்டு சக்தி மீது இருக்கும் பழியை துடைத்து விட வேண்டும் என சக்தியின் கணவர் வருண் நினைத்து கொண்டிருக்கிறார். தற்போது கதைப்படி அவர் நகைகளை திருடியவரை கையும் களவுமாக பிடித்து நகைகளை மீட்டுக் கொண்டு வந்து விட்டார். இன்றைய எபிசோடில் நகைகளை அவர் கோவிலில் கொண்டு வந்து சேர்த்து விடுவார் என்று தெரிகிறது.்கதை விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் தற்போது மௌன ராகம் முடிவடைய இருப்பதாக தகவல்கள் வேகமாக பரவி வருகிறது.
கார்த்திக்கின் இரண்டாவது மனைவி காதம்பரிக்கு பிறந்த குழந்தைதான் ஸ்ருதி. ஆனால் இது காதம்பரி ஒருவருடன் ஏற்பட்ட பழக்கத்தால் பிறந்த குழந்தை. இது கார்த்திக்குக்கு பிறந்த குழந்தையை அல்ல. இந்த உண்மை தெரிய வரும்போது இந்த நாடகம் முடிவடையும் என்று பலரும் எதிர்பார்த்திருந்த நிலையில், தற்போது மிக விரைவாக நாடகம் முடிவடைய இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. கிளைமேக்ஸ் காட்சிகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியிருக்கிறது. இது எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை. இது குறித்து நாடக குழுவோ விஜய் டிவியினரோ எந்த அறிவிப்பையும் வெளியிடாமல் இருந்து வருகின்றனர். விரைவில் இதன் உண்மைத் தன்மை குறித்து தெரிய வரும். இருப்பினும் சீரியல் முடிவடைய இருக்கிறது என்ற செய்தி கேட்டு மௌனராகம் சீரியலின் ரசிகர்கள் மிகுந்த சோகத்தில் இருக்கிறார்கள்.
ஸ்ருதியும் காதம்பரியும் தொடர்ந்து சக்தி மற்றும் மல்லிகாவுக்கு கெடுதல் செய்து வருவதும் அதை சக்தி கண்டுபிடித்து ஸ்ருதி காதம்பரியை கையும் களவுமாக பிடிப்பதுமே நாடகத்தின் கதையாக சென்று கொண்டிருப்பது சிறிது சோர்வை ஏற்படுத்தியுள்ளது. எனவே கதையை விரைந்து முடிக்க இருப்பதாக சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.