6 வருடங்களுக்கு பிறகு பிறந்த மகன்.! புகைப்படத்தை பகிர்ந்து அறிவித்த பாண்டவர் இல்லம் அனு.!

பாண்டவர் இல்லம் சீரியலில் நடித்து வரும் அனுவுக்கு தற்போது ஆண் குழந்தை பிறந்து இருக்கும் செய்தியை அவரே புகைப்படத்துடன் பகிர்ந்து இருக்கிறார். இதனால் அவரது ரசிகர்கள் செம்ம குஷியில் இருக்கிறார்கள். சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டவர் இல்லம் என்கிற சீரியலில் நடித்து வருபவர் அனு. இந்தத் தொடர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற தொடரை காப்பி அடித்து எடுக்கப்பட்டது என்ற விமர்சனம் இருந்து வருகிறது. இதில் பாப்ரி கோஷ் முன்னணி நடிகையாக நடித்து வருகிறார். மூன்று வருடங்களுக்கும் மேலாக இந்த தொடர் சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது. பாண்டவர் குடும்பம் வெர்சஸ் ஜமீன் குடும்பம் என்ற இரு குடும்பங்களுக்கு இடையே உள்ள பகையை மையமாக வைத்து இந்த கதை ஒளிபரப்பாகி வருகிறது. இதில் ரோஷினி என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை அனு. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

6 வருடங்களுக்கு பிறகு பிறந்த மகன்.! புகைப்படத்தை பகிர்ந்து அறிவித்த பாண்டவர் இல்லம் அனு.! 1

விளம்பரம்

 

அதன் பின்னர் இவர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மெல்ல திறந்தது கதவு என்கிற சீரியலில் நடித்து பிரபலமானார். இந்த சீரியலில் இவர் நெகட்டிவ் கதாபாத்திரமாக வில்லியாக நடித்தார். இதில் சிறப்பான வில்லத்தனத்தை வெளிப்படுத்தியதால் இவருக்கு அடுத்தடுத்த படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அடுத்த தொடராக சன் டிவியில் பாண்டவர் இல்லம் என்கிற தொடரில் ஆரம்பத்தில் வில்லியாக நடித்தார். தற்போது இவர் மனம் திருந்தி பாசிட்டிவ் ரோலாக மாறும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இதன் பின்னர் இவருக்கும் ரசிகர்கள் கிடைத்திருக்கிறார்கள். இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு விக்னேஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஐந்து வருடங்களுக்குப் பிறகு தற்போது கர்ப்பமாக இருக்கிறார் நடிகை அனு. 7 மாதமாக இருக்கும் வளைகாப்பு புகைப்படங்களை சமீபத்தில் அனு வெளியிட்டிருந்தார்.

விளம்பரம்
தொடர்புடையவை  23வது பிறந்தநாளை கொண்டாடிய BiggBoss போட்டியாளர் Janany..! வாழ்த்து தெரிவித்த ரசிகர்கள்..!

6 வருடங்களுக்கு பிறகு பிறந்த மகன்.! புகைப்படத்தை பகிர்ந்து அறிவித்த பாண்டவர் இல்லம் அனு.! 3

எந்த ஆடம்பரமும் இல்லாமல் நண்பர்கள் யாரையும் அழைக்காமல் வீட்டிலேயே வைத்து தனது வளைகாப்பை நடத்தி இருந்தார் அனு. தில் வித்தியாசமாக பலூன்கள் நிறைந்த ஊஞ்சல் ஒன்றில் அமர்ந்தபடி அந்தரத்தில் தொங்கியபடி அவர் அந்த புகைப்படங்களை எடுத்து இருக்கிறார். கிரேன் உதவியுடன் அந்த போட்டோ சூட் புகைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்று அவர் தனது instagram பக்கத்தில் ஒரு புகைப்படம் ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் தனக்கு ஆண் குழந்தை பிறந்து இருப்பதாகவும் பெற்றோர்களாக புது உலகில் பயணிக்க இருப்பதாகவும்,உங்களுடைய அன்பும் ஆசீர்வாதங்கள் தேவை என்றும் பகிர்ந்து இருக்கிறார். இதனால் அனுவுக்கு அவரது ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment