Categories: சினிமா

7 கோடிக்கு மேல் வரி ஏய்ப்பு!!விரைவில் கைதாகும் நடிகர் எஸ்.ஜே.சூர்யா!!

வெளியிட்டது

நடிகர் அஜித் நடிப்பில் வெளியான படம் “வாலி”. மாறுபட்ட கதை அம்சத்தில், இரட்டை வேடத்தில் முதல் முறையாக அஜித்தை நடிக்க வைத்து ரசிகர்களை மிரட்டியவர் இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா. முதல் படத்திலேயே மாபெரும் வெற்றி. உடனே அடுத்து நடிகர் விஜயுடன் கூட்டணி. விஜய், ஜோதிகா நடிப்பில் “குஷி” என்ற படத்தை அடுத்து இயக்கி வெளியிட்டார்.

அந்த ஆண்டு வெளியான மிக பெரிய வெற்றி படமாக இந்த படம் உருவெடுத்தது. முதல படத்தை விட இதில் இன்னுமும் பெரிய வெற்றி அடைந்தார். அதே படத்தை தெலுங்கு பவன் கல்யாணுடன் அதே பெயரில் எடுத்து வெளியிட்டார். அன்று வரை வெளியான தெலுங்கு படங்களிலேயே மிக பெரிய வெற்றியையும், வசூலையும் கொடுத்த படமாக இந்த படம் உருவெடுத்தது.

7 கோடிக்கு மேல் வரி ஏய்ப்பு!!விரைவில் கைதாகும் நடிகர் எஸ்.ஜே.சூர்யா!! 1

இரண்டு மிக பெரிய வெற்றி படங்களை எடுத்த இவர் மூன்றாவது படத்தில் தானே நடிகராக களம் இறங்கினர்.  “நியூ” பெயரில் நடிகை சிம்ரனுடன், ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் மிக பெரிய பொருட்செலவில் இந்த படம் தயாராகி வெளியானது. படம் பெரிய எதிர்பார்ப்புடன் வந்து பெரிய தோல்வியாக முடிந்தது.

இருப்பினும் அடுத்தடுத்து அன்பே ஆருயிரே, திருமகன், வியாபாரி என பல படங்களில் நடித்தார். அனைத்தும் தோல்வியாகவே அமைந்தது. பின்னர் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளியான “ஸ்பைடர்” படத்தில் வில்லனாக நடித்து பெரும் வரவேற்பை பெற்றார்.

இப்போது முக்கிய வில்லன் நடிகராக கண்டறியப்பட்டு மெர்சல், மாநாடு, டான் என பல படங்களில் நடித்து மிரட்டி வருகிறார். தொடர்ந்து நடிகராக பயணித்து வரும் இவர் அடுத்து எப்போது இயக்குவார் என்று தெரியவில்லை.

இந்நிலையில், கடந்த 2002 – 03 முதல் 2006- 07 வரையிலான ஆறு நிதியாண்டுகளுக்கும், 2009-10ம் நிதியாண்டுக்கும் வருமான வரிக்கணக்கை தாக்கல் செய்யவில்லை எனவும், வருமான வரியாக 7 கோடியே 57 லட்சம் ரூபாய் செலுத்த வருமான வரித்துறை சார்பில் இயக்குனரும், நடிகருமான எஸ்.ஜே.சூர்யாவுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

இந்த நோட்டீசை எதிர்த்து எஸ்.ஜே.சூர்யா தாக்கல் செய்த மனுக்களை வருமான வரித் தீர்ப்பாயம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து எஸ்.ஜே. சூர்யாவுக்கு எதிராக வருமான வரித்துறை சார்பில் 2015ம் ஆண்டு ஆறு வழக்குகள் தொடரப்பட்டன. சென்னை எழும்பூர் அல்லிகுளம் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள இந்த வழக்குகளை ரத்து செய்யக் கோரி எஸ்.ஜே.சூர்யா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுக்கள் நீதிபதி ஜி.சந்திரசேகரன் முன் விசாரணைக்கு வந்த போது, குறிப்பிட்ட நிதியாண்டுகளின் வருமான வரிக் கணக்குகள் மறுமதிப்பீடு நடைமுறைகள் நிலுவையில் உள்ள நிலையில், இந்த வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதால் அவற்றை ரத்து செய்ய வேண்டும் என்று எஸ்ஜே சூர்யா தரப்பில் வாதிடப்பட்டது. வருமான வரித் துறை தரப்பில், முறையான சோதனை நடத்தி, வருமானத்தை மறைத்தது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து தான் இந்த வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி எஸ்.ஜே.சூர்யா இந்த வழக்கை சந்தித்து தான் ஆகா வேண்டும், தள்ளுபடி செய்ய முடியாது என உதறி பிறப்பித்துள்ளது.

இதனால் இவர் இப்பொது சட்ட சிக்கலில் சிக்கி உள்ளார். நேரடியாக வழக்கை சந்திக்க வேண்டிய நெருக்கடியில் உள்ளார். இதனால் இவர் இந்த வழக்கு நிரூபிக்க பட்டால் விரைவில் கைதாகவும் வாய்ப்புள்ளது.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்