“நிறைய பேர் பணத்த வாங்கிட்டு ஏமாத்துறாங்க”!!யாரையுமே நம்ப முடில!!குக் வித் கோமாளி புகழ்

விஜய் டிவியின் பெருமைக்கு அறிமுகங்களில் குக் வித் கோமாளி புகழ் நிச்சயம் எப்போதும் இடம் பிடிப்பார். நடிகர் வடிவேலு பாலாஜியால் அந்த தொலைக்காட்சியில் கலக்க போவது யாரு? நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இவர், அதன் மூலம் ஒரு சின்ன அறிமுகத்தை பெற்றார். இப்பொது விஜய் டிவியின் முக்கிய நிகழ்ச்சியான “குக் வித் கோமாளி” முதல் சீசனில் கோமாளியாக அறிமுகப்படுத்தப்பட்ட இவர், அது முதலே ரசிகர்களை கவர்ந்த கலைஞராக மாறிப் போனார் அவர். வீடியோ கீழே உள்ளது 

இப்பொது நடைபெற்று வரும் 3வது சீசனிலும் அவர் தான் முக்கிய கோமாளி. கலந்து கொள்ளும் எந்த குக்குடனும் இவருடைய கெமிஸ்ட்ரி நன்றாக இருப்பதன் காரணத்தால் இவர் மிகவும் ரசிகர்களாலும் கலந்து கொள்ளும் குக்கிற்கும், போட்டி நடுவர்களுக்கும் பிடித்துப்போன கலைஞராகவே உள்ளார்.

விளம்பரம்

"நிறைய பேர் பணத்த வாங்கிட்டு ஏமாத்துறாங்க"!!யாரையுமே நம்ப முடில!!குக் வித் கோமாளி புகழ் 1

அந்த நிகழ்ச்சி கொடுத்த அறிமுகம் நடிகர் அஜித்துடன் “வலிமை” படத்தில் ஒரு சிறிய ரோலில் நடித்தார். நடுவில் அஷ்வினுடன் “என்ன சொல்ல போகிறாய்” என்ற படத்திலும் முக்கிய நபராக நடித்துயிருந்தார்.இவ்வாறு இவர் வளர்ந்து வரும் நிலையில், பெருமபாலான விஜய் டிவி கலைஞர்கள் வெளியில் நடக்கும் விழாக்களிலும் கலந்து கொள்வது சகஜம். ஆனால் அதனை மையப்படுத்தி வெளியில் பல பண மோசடிகள் நடந்த வண்ணம் உள்ளன.

விளம்பரம்
தொடர்புடையவை  அம்மாவாக நின்ற ராதிகா.! தாமதமாக வந்த பாக்யா.! வார்த்தைகளால் காயப்படுத்தும் இனியா.!

இது இப்பொது புகழையும் தாக்கி உள்ளது. அவர் மதுரையில் நடக்கவிருக்கும் ஒரு தனியார் விழாவில் கலந்து கொள்வதாக கூறி பணம் பெற்று இப்பொது அவரின் மீதே குற்றம் சாட்டியுள்ளனர் விழா நடத்துபவர்கள். இதற்கு புகழ் இப்பொது உண்மை நிலவரத்தை கூறி வீடியோ ஒன்றை வெளியீட்டுளளார்.

“நான் இங்கு வருகிறேன், அந்த விழாவில் கலந்து கொள்ள போகிறேன், என பல்வேறாக கூறி பலரும் பணம் வாங்கிக்கொண்டு என்னை மாட்டி விடுகிறார்கள், நான் இப்போது பிலிபைன்ஸ் நாட்டில் உள்ளேன் ஆனால் நான் தஞ்சாவூர் வருகிறேன் என கூறி சிலர் பணம் வாங்கியுள்ளனர். அதற்கும் எனக்கும் எந்த சம்மந்தமும் கிடையாது. நான் எதாவது விழாக்களில் கலந்துக்கொள்கிறேன் என்றால் அதனை நானே தெரிவித்துவிடுவேன், யாரும் இது போன்று ஏமாற வேண்டாம்” என பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

விளம்பரம்

Video Courtesy – BehindWoodsTV

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment