கத போற போக்கு சரி இல்லை.! பாண்டியன் ஸ்டோர்ஸில் இருந்து அதிரடியாக விலகிய சாய் காயத்திரி.

வெளியிட்டது

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரிலிருந்து தற்போது சாய் காயத்ரி விலகி விட்டதாக அவரே தனது சமூக வலைதளப் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார் இந்த கதாபாத்திரத்தில் நடிக்க தனக்கு கம்பர்ட்டாக இல்லை என்றும், கதையின் போக்கு தனக்கு ஒத்துவரவில்லை மேலும் என்னுடைய எதிர்கால வாழ்க்கைக்கும் அது ஒத்து வராது என்பதால் சீரியலில் இருந்து விலகி விட்டதாக தற்போது அறிவித்திருக்கிறார். விஜய் தொலைக்காட்சியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் குடும்ப பங்கான தொடராக இருந்து வருகிறது. இந்தத் தொடரில் இருந்து அடிக்கடி நடிகைகள் மாறுவது வழக்கமாக இருக்கிறது. முதலில் முல்லையாக நடித்து வந்த விஜே சித்ரா இறந்து விட்டதால் அந்த கதாபாத்திரத்தில் காவியா அறிவுமணி முல்லையாக நடித்து வந்தார். பின்னர் சில நாட்களில் அவரும் அந்த கதாபாத்திரத்தில் இருந்து விலகி இருந்தார். இதனால் தற்போது சிப்பிக்குள் முத்து தொடரில் நடித்து வந்த லாவண்யா முல்லையாக நடித்து வருகிறார்.

கத போற போக்கு சரி இல்லை.! பாண்டியன் ஸ்டோர்ஸில் இருந்து அதிரடியாக விலகிய சாய் காயத்திரி. 1
அதேபோல ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் ஆரம்பத்தில் வைஷாலி நடித்து வந்தார். அவர் நடித்து வந்த சில மாதங்களிலேயே அவர் மாற்றப்பட்டு விஜே தீபிகா அந்த கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். இவருக்கும் கண்ணனுக்கும் நல்ல கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகி இருந்த நிலையில், இவரையும் திடீரென ஒரு நாள் சீரியலில் இருந்து நீக்கி இருந்தார்கள். தன்னை நீக்கியதற்கான காரணம் குறித்து ஐஸ்வர்யா பேட்டிகளில் கூறியபோது தனக்கு அதிகமாக மேக்கப் போட்டதால் முகப்பருக்கள் அதிகமாகி கேமராவை எதிர்கொள்ள முடியாத நிலை இருந்தது. முகப்பரு இருப்பதால்தான் தன்னை நீக்கி விட்டார்கள் என்று காட்டமாக விமர்சனங்கள் கூறியிருந்தார். தற்போது அதிகமாக முயற்சி செய்து முகப்பருக்களை நீக்கி இருக்கிறார். இந்த நிலையில் சாய் காயத்ரி இந்த சீரியலில் இருந்து விலகி விட்டதால், மீண்டும் அதே கதாபாத்திரத்திற்கு தீபிகா நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.


ஆரம்பத்தில் இருந்தே பாண்டியன் ஸ்டோர்ஸ் கதாபாத்திரத்தில் நிறைய மாற்றங்கள் நடந்திருக்கிறது. முதலில் விஜே சித்ரா – காவியா – லாவண்யா என்று முல்லை கதாபாத்திரம் மூன்று முறை மாற்றப்பட்டிருக்கிறது. பின்னர் ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் வைஷாலி – விஜே தீபிகா – சாய் காயத்ரி – மீண்டும் விஜே தீபிகா என்று நான்கு முறை மாற்றப்பட்டிருக்கிறது. மேலும் மீனாவின் தங்கையாக ஸ்வேதா கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் கூட சமீபத்தில் மாற்றப்பட்டு இருந்தார். பின்னர் பிரசாந்த் என்னும் கதாத்திரத்தில் நடிகர் வசந்த் நடித்து வந்தார். தற்போது அவரும் மாற்றப்பட்டு மகேஷ் என்பவர் நடித்து வருகிறார். மூர்த்தியின் மாமா கதாபாத்திரத்தில் நடித்து வந்த நெல்லை சிவா இறந்ததால் தற்போது இன்னொருவர் அந்த கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இதுபோல தொடர்ந்து நடிகர்கள் மாற்றப்பட்டு வருவதால் பாண்டியன் ஸ்டோர்ஸ் ரசிகர்கள் அதிருப்தியில் இருக்கிறார்கள்.


மேலும் தற்போது கதைப்படி பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தின் மருமகள்கள் அடுத்தடுத்து கர்ப்பம் ஆகி வருவதால் இந்த கதைக்களம் சரியாக செல்லவில்லை. பலரும் இந்த கதையை விரும்பி பார்ப்பதாக தெரியவில்லை. தற்போது கதை பெரிய அளவில் வரவேற்பு பெறாத நிலையில் கதைக்களத்தை மாற்றி இருக்கிறார் இயக்குனர். அதன்படி ஜீவா தனது மாமனார்ர் பக்கம் சாய்ந்து விடுவார் போன்று கதை நகர்ந்து கொண்டிருக்கிறது. சிலரோ கதை இல்லை என்றால் நாடகத்தை முடித்து விடுங்கள் இதுபோல் அறுவை போடாதீர்கள் என்று இயக்குனருக்கு கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்த நிலையில் தொடரில் இருந்து அடுத்தடுத்த விலகல்கள் நடந்து வருவதால் என்ன செய்யப் போகிறார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்