Categories: சினிமா

உங்க அப்பனுக்கு தலைக்கு ஊத்தி முடிச்சு விடுயா.! அதிர வைக்கும் “தலைக்கூத்தல்” ட்ரைலர்..!

வெளியிட்டது

நடிகர் சமுத்திர கனி நடிக்கும் “தலைக்கூத்தல்” படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகியுள்ளது. குடும்பத்தின் நலனுக்காக படுத்த படுக்கையாக இருக்கும் தந்தையை கொலை செய்து விடுமாறு அனைவரும் கூறுகின்றனர். ஆனாலும் தனது தந்தை உயிரை காப்பாற்ற மகன் போராடும் போராட்டமே தலைக்கூத்தல் படத்தின் கதையாகும். தலைக்கு ஊத்தல் (Thalaikoothal) அல்லது தலைக்கூத்தல் என்பது தமிழ்நாட்டின், தென்மாவட்டங்களில், குறிப்பாக விருதுநகர் மாவட்டத்தில், முதியவர்களை தலைக்குக் குளிப்பாட்டி கொலை செய்யும் முறையைக் குறிக்கிறது. இம்முறையில் குடும்பத்துக்கு பாரமாகக் கருதப்படும் முதியவர்கள் அதிகாலையில் எண்ணெய் தேய்த்துக் குளிப்பாட்டப்படுவர். பின்பு நாள் முழுவதும் அவர்களுக்கு அதிக அளவில் இளநீர் குடிக்கத் தரப்படும், அப்போது எதிர்ப்பு சக்தி குறைவாகக் கொண்ட முதியவர்களுக்கு, இதனால் கடுமையான காய்ச்சல், வலிப்பு, சிறுநீரகச் செயலிழப்பு ஏற்பட்டு ஓரிரு நாட்களில் இறப்பு ஏற்படும். ட்ரைலர் வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

உங்க அப்பனுக்கு தலைக்கு ஊத்தி முடிச்சு விடுயா.! அதிர வைக்கும் "தலைக்கூத்தல்" ட்ரைலர்..! 1

இச்செயல் இந்தியாவில் சட்டத்துக்குப் புறம்பானது. சில நேரங்களில் தலைக்கு ஊத்துவதற்கு பதிலாக குளிர்ந்த பால் தருவது, நஞ்சு ஊசி போடுவது போன்ற செயல்களின் மூலம் முதியவர்கள் கொலை செய்யப்படுவர். பெரும்பாலும் முதியவர்களின் உறவினர்களின் அனுமதியோடு அல்லது உறவினர்களாலேயே இக்கொலைகள் நடத்தப்படுகின்றன. 2010 ஆம் ஆண்டு தலைக்கு ஊத்தலில் இருந்து தப்பித்த ஒரு 80 வயது முதியவர் தனது உறவினர் வீட்டில் தஞ்சம் புகுந்தார். இந்த சம்பவம் மாவட்ட நிர்வாகம் மற்றும் ஊடகங்களின் கவனத்தை ஈர்த்ததால், இந்த முறை பற்றி பரவலாகச் செய்திகள் வெளியாகின. இந்த நிகழ்வுகளைத் தடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கைகள் எடுத்தது. தற்போது இதை மையமாக வைத்து சமுத்திரகனி இந்த படத்தை எடுத்து இருக்கிறார். இந்தப் படத்தில் சமுத்திரக்கனியுடன் இணைந்து கதிர் வசுந்தரா வையாபுரி முருகதாஸ் போன்ற பலர் நடித்திருக்கிறனர்.

இந்தப் படத்திற்கு எழுத்தாளர் ஜெய பிரகாஷ் கதை, திரைக்கதை, வசனம் ஆகியவற்றை எழுதியிருக்கிறார். அமெரிக்காவில் சாஃப்ட்வேர் இன்ஜினியராக பணியாற்றி வந்த ஜெயப்பிரகாஷ், “தலைக்கூத்தல்” படத்தைப் பற்றி கூறும் பொழுது 2018 ஆம் ஆண்டு இது போன்ற ஒரு படத்தை எடுக்க வேண்டும் என்கின்ற கதை கரு தமக்குள் தோன்றியதாகவும், வயது முதிர்ந்தவர்களை சொந்த குடும்பத்தினரே கொல்லும் வழக்கம் தென் தமிழ்நாட்டில் உள்ள சில பகுதிகளில் நடைபெறுவது அதிர்ச்சியாக இருந்தது. அது பற்றி பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டேன். அதை பற்றி விவாதிப்பதை விட எந்த சூழலில் இந்த முடிவை குடும்பத்தினர் எடுக்கிறார்கள் என்பதை யோசித்தபோது தமக்குள் நிறைய கேள்விகள் தோன்றின. இந்த கேள்விகளுக்கான விடையை தேடுவதே இந்த படத்தின் நோக்கமாக இருப்பதாக கூறினார். தற்போது வெளியாகி இருக்கும் படத்தின் ட்ரைலரை நீங்களும் காண..! கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!

YouTube Video Embed Code Credits: YNot Studios

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்