பிக்பாஸ் நிகழ்ச்சி மூலமாக பலருக்கும் பிரபலமானவர் சனம் செட்டி. பெங்களூர்வை சேர்ந்த இவர் படங்களில் நடிக்கும் காரணத்திற்காக சென்னைக்கு வந்தார். இவர் மிஸ் இந்தியா பட்டத்தையும் பெற்றிருக்கிறார். தமிழில் அம்புலி என்கிற திரைப்படம் மூலமாக திரைத்துறையில் அறிமுகமானார். பின்னர் பெரிய அளவில் வாய்ப்புகள் எதுவும் கிடைக்காத காரணத்தினால் பிக்பாஸில் கலந்து கொண்டார். பிக்பாஸ் சீசன் நான்கில் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டார். இவருக்கும், பாலாஜி முருகதாஸுக்கும் பல பிரச்சினைகள் ஏற்பட்டது. இருவருக்கும் அடிக்கடி சண்டை பிரச்சனைகள் என நாளுக்கு நாள் முற்றிய நிலையில் ஒரு கட்டத்தில் சனம் செட்டி அந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். இந்த முடிவு மிக தவறானது என்று பிக்பாஸ் ரசிகர்களே சனம்க்கு ஆதரவாக பேச தொடங்கினர்.

சனம் வெளியேறி இருக்காவிட்டால் அவர்தான் நிகழ்ச்சியின் வெற்றியாளர் என்றும் பலரும் கருத்து தெரிவித்து வந்தனர். சனம் வெளியே வந்த பிறகு முந்தைய சீசனில் கலந்து கொண்ட தர்ஷனுக்கும், அவருக்கும் மோதல் போக்கு ஏற்பட்டது. தர்ஷன் சீசன் 3 யில் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டார். அந்த சீசனுக்கு செல்லும் முன் அவருக்கும் சனமுக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்று இருந்தது. ஆனால் சீசன் 3 முடிந்து வெளியே வந்த பிறகு தர்ஷன் தன்னை திருமணம் செய்து கொள்ள மறுப்பதாக கூறி காவல் நிலையத்தில் புகார் கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார். தற்போது அனைத்து பரபரப்புகளும் ஓய்ந்து, படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார். ஆனாலும் அவருக்கு எதுவும் சரியான வாய்ப்புகள் அமையவில்லை.
இந்த நிலையில் அவர் இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். இன்று அவர் வெளியிட்டுள்ள படத்தை பார்த்த பலரும் ஆச்சரியத்திற்கு உள்ளாகினர். அதற்கு காரணம் அவர் உடல் எடை கூடி, ஹேர்ஸ்டைலை மாற்றி ஆளே அடையாளம் தெரியாமல் மாறிப் போயிருக்கிறார். அவரை பார்க்கும் பொழுது மஞ்சு வாரியர் போலவே இருப்பதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். அவரின் சமீபத்திய புகைப்படங்களை நீங்களும் காண..!