இன்ஃபோசிஸ் நிறுவனம் ரூ.4,466 கோடி கோடி லாபம்

நாட்டின் முன்னணி தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனமான இன்ஃபோசிஸ் தனது மூன்றாம் காலாண்டில் ரூ.4,466 கோடி லாபம் ஈட்டியுள்ளது.

நடப்பு 2019-20ஆம் நிதியாண்டின் மூன்றாம் காலாண்டில் இந்நிறுவனமானது ரூ.23,092 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. இது கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தில் ரூ.21,400 கோடி வருவாய் ஈட்டி இருந்தது. இதனோடு ஒப்பிடுகையில் இந்த ஆண்டு 7.9 சதவீத வளர்ச்சியாகும்.

அதேபோல ஒட்டு மொத்த நிகர லாபம் ரூ.3,610 கோடியிலிருந்து 23.7 சதவிகிதம் அதிகரித்து ரூ.4,466 கோடியாக உள்ளது என பங்குச்சந்தையில் இன்ஃபோசிஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

பல்வேறு காரணிகளைக் கருத்தில் கொள்ளும் போது, நடப்பு நிதியாண்டில் நிலையான கரன்சி மதிப்பு அடிப்படையில் நிறுவனத்தின் வருவாய் 10 முதல் 10.5 சதவீத வளர்ச்சி காணும் என மதிப்பிடப்பட்டுள்ளது. கடந்த அக்டோபர் மாதத்தில் வருவாய் வளர்ச்சி 9 முதல் 10 சதவீதமாக இருக்கும் என இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சலீஸ் பரேக் கூறியுள்ளார்.

விடுதலை தமிழ்முரசு

Senior Editor - TamilGlitz சமூக அரசியல் பொருளாதாரம் குறித்தான ஆர்வம் அதிகம். மின்னம்பலத்தில் தொடங்கிய பயணம் ஐபேக் வழியாக இங்கு! As a Tamil news enthusiast with a knack for uncovering the hidden political drama behind the glitzy entertainment scene, I'm your source for the juiciest stories and insightful analysis. #விடுதலை

புதிய செய்திகள்