சர்பேட்டா என்ற படத்தில் நடித்து பிரபலமானவர் சந்தோஷ் பிரதாப். வாயப்புகள் தேடி அலைந்து கொண்டிருந்தவருக்கு சர்பேட்டா படம் நல்ல திருப்புமுனையாக அமைந்தது. ஆனால் இவருக்கு நல்ல பெயரையும், புகழையும் கொடுத்த நிகழ்ச்சி என்றால் அது குக் வித் கோமாளிதான். இதில் கலந்து கொண்ட பின்னர் அவருக்கு பல படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. சில வாரங்களுக்கு முன்பு குக் வித் கோமாளியில் இருந்து சந்தோஷ் பிரதாப் வெளியேற்றப்பட்டார். இவரது வெளியேற்றம் பார்க்கும் ரசிகர்களையும், சக போட்டியாளர்களையும் அழ வைத்தது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இவர் குக் வித் கோமாளியில் இருக்கும் போதே இவருக்கும் சுனிதாவிற்கும் இடையே காதல் என்று கிளப்பிவிட்டனர். இவர்கள் இருவரும் இணைந்து செய்யும் சேட்டைகள் பார்ப்பதற்கே மிக க்யூட்டாக இருக்கும். சுனிதாவிற்கு சரியாக தமிழ் பேச வராது. இருந்தபோதிலும் தமிழை கற்றுக் கொண்டு அவர் அரைகுறையாக பேசுவது மிக அழகாக இருக்கும். சீசன் 3 தொடங்கியது முதலே சந்தோஷ் மற்றும் தர்ஷனை தனது Crush என சொல்லிக் கொண்டு இருந்தார் சுனிதா. ஆனால் சந்தோஷ் மற்றும் சுனிதாவின் நட்பு பார்ப்பதற்கு அழகாகவும், உண்மையில் காதலிப்பது போலவும் இருந்தது. Youtube Video Code Embed Credits: Little Talks
ஏற்கனவே ஒரு பேட்டியின் போது சுனிதா அல்லது ரோஷ்ணி இருவரில் யாரை திருமணம் செய்து கொள்வீர்கள் என்று சந்தோஷிடம் கேட்டபோது அவர் சுனிதாவை திருமணம் செய்து கொள்வதில் எந்த தயக்கமும் இல்லை என்று பதிலளித்து இருந்தார். தற்போது இன்னொரு பேட்டியின் போது குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்காக நான் சுனிதாவை பயன்படுத்தினேன் என்று கூறுகிறார்கள், ஆனால் நான் அப்படி செய்யவில்லை என்று எமோஷனலாக கூறினார். அவரின் பேட்டியை நீங்களும் காண..Watch the below Video..