ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சரிகமப நிகழ்ச்சியில் தற்போது ஒரு நெழ்ச்சியான சம்பவமொன்று நடந்துள்ளது. நிகழ்ச்சி ஆரம்பித்து இரண்டு வாரங்கள் கழித்து இலங்கையில் இருந்து அசாணி என்கிற ஒரு பெண் தற்போது பாட வந்திருக்கிறார். அவரது பின்னணி குறித்து பார்த்த பொழுது பலருக்கும் நெகிழ்ச்சிகயை ஏற்படுத்தியிருக்கிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு போட்டியாக ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சரிகமப என்கிற நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. சீனியரில் மூன்று சீசன்களையும் ஜூனியர்களில் இரண்டு சீசன்கள் என்று மொத்தம் ஐந்து சீசனை முடித்த இந்த நிகழ்ச்சி தற்போது சரிகமப லிட்டில் சாம்பியன்ஸ் சீசன் 3-ஐ ஒளிபரப்பி வருகிறது. விஜய் தொலைக்காட்சியை காட்டிலும் பல நல்ல திறமையான பாடகர்களுடன் இந்த நிகழ்ச்சி தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இதில் மெகா ஆடிஷன் என்று சொல்லப்படும் ஆடிஷனில் கலந்து கொள்ள பணம் கூட இல்லாமல் அசாணி என்கிற சிறுமி தவித்து வந்துள்ளார். அவரது பெற்றோர்கள் கண்டியில் தேயிலை தோட்டத்தில் வேலை பார்த்து வருகின்றனர். இந்த நிலையில் தற்போது அந்தப் பெண்ணை ஊரில் உள்ள மக்கள் அனைவரும் பணம் கொடுத்து இந்த நிகழ்ச்சிக்கு செல்லுமாறு அனுப்பி வைத்திருக்கின்றனர். அவரும் இந்த நிகழ்ச்சியில் வந்து தற்போது பாடத் தொடங்கி இருக்கிறார். அந்த நெகிழ்ச்சியான ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது. ப்ரோமோவைப் பார்த்த பலரும் நெகிழ்ந்து போய் கண்ணீர் வடித்துள்ளனர். மேலும் பேசிய நடுவர் ஸ்ரீநிவாஸ் சாதாரணமானவர்களை சாதனையாளர்களாக ஆக்குகிறது இந்த நிகழ்ச்சி. அந்த வகையில் இந்த பெண்ணுக்கும் இந்த நிகழ்ச்சி ஒரு வாய்ப்பை வழங்குகிறது.
நீயும் பயம் இல்லாமல் பாடு என்று சொல்லி அவருக்கு ஊக்கம் அளிக்கிறார். அப்போது அந்த சிறுமி ராசாவே உன்னை நம்பி என்கிற பாடலை பாடுகிறார். மேலும் தன் தாய்க்காக இந்த பாடலை பாடுகிறேன். என் ஊர் மக்களுக்காகவும் நான் இதில் வெற்றி பெறுவேன் என்று சொல்லி கண்கலங்கி அழுகிறார். நெகிழ்ச்சியான அந்த ப்ரோமோ தற்போது வெளியாகியிருக்கிறது.! நீங்களும் அந்த வீடியோவை காண.! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Zee Tamil