Categories: சினிமா

Climax-ல அழுதுட்டேன் சார்.! சசிகுமாரின் அயோத்தி படத்தை பற்றி கண்கலங்கி விமர்சனம் சொன்ன மக்கள்.!

வெளியிட்டது

சசிகுமார் நடிப்பில் தற்போது வெளியாகி இருக்கும் படம் தான் அயோத்தி. இந்த படத்தை பார்த்துவிட்டு வெளியே வந்த மக்கள் பலரும் படம் மிகவும் நன்றாக இருப்பதாக கருத்து தெரிவித்து வருகின்றனர். தமிழ் திரையுலகில் இயக்குனராக இருந்து பின்னர் நடிகராக அவதாரம் எடுத்திருப்பவர் சசிகுமார். இவர் 1999 ஆம் ஆண்டு சேது படத்தில் உதவி இயக்குனராக பணிபுரிந்து பின்னர் இயக்குனராக மாறினார். ப2008 ஆம் ஆண்டு இவர் சுப்பிரமணியபுரம் என்கிற படத்தை தயாரித்து, இயக்கி மற்றும் நடிகராகவும் அவதாரம் எடுத்திருந்தார். அதன் பின்னர் இவர் நாடோடிகள், சம்போ சிவ சம்போ, ஈசன், போன்ற பல படங்களில் நடித்திருக்கிறார். குட்டிப்புலி, கிடாரி, கொடிவீரன், நாடோடிகள் பாகம் 2, உடன்பிறப்பே, எம்ஜிஆர் மகன் போன்ற பல படங்களில் தொடர்ந்து நடித்திருந்தார். இவர் நடிப்பில் வெளியான கடைசியாக வெளியான திரைப்படம் காரி. அந்த படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியை தரவில்லை. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Climax-ல அழுதுட்டேன் சார்.! சசிகுமாரின் அயோத்தி படத்தை பற்றி கண்கலங்கி விமர்சனம் சொன்ன மக்கள்.! 1

தற்போது சசிகுமார் பகைவனுக்கு அருள்வாய், அயோத்தி, நந்தன், நானா போன்ற பல படங்களை கைவசம் வைத்திருந்தார். இதில் அயோத்தி படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது. இந்த படத்தை டிரெண்ட் ஆர்ட்ஸ் நிறுவனத்தின் ஆர் ரவீந்திரன் தயாரிப்பில், மந்திரமூர்த்தி என்பவர் இயக்கியிருக்கிறார். இந்த படத்தை பிரபல எழுத்தாளர் எஸ் ராமகிருஷ்ணன் கதை எழுதி இருக்கிறார். ஆர் ரகுனந்தன் என்பவர் இசையமைத்திருக்கிறார். இந்த படத்திற்கு அயோத்தி என்ற தலைப்பு வைத்திருப்பதால் மதம் சார்ந்த திரைப்படமாக இருக்க வாய்ப்புள்ளது என்று பலரும் கருத்து தெரிவித்து வந்த நிலையில், சமீபத்தில் பேட்டி அளித்திருந்த சசிகுமார் இது மதம் சார்ந்த படம் அல்ல மனிதன் சார்ந்த திரைப்படம் என்று கூறி இருக்கிறார். இந்தப் படத்தில் யஷ்பால் சர்மா ப்ரீத்தி அஸ்ராணி, குக் வித் கோமாளி பிரபலம் புகழ், போஸ் வெங்கட் ஆகியோர் நடித்திருக்கின்றனர்.

பொங்கல் தினத்தை முன்னிட்டு இந்த படத்தின் டிரைலர் வெளியாகி இருந்தது. இந்த நிலையில் படம் இன்று வெளியாகி இருக்கிறது. மாறுபட்ட கதை அம்சத்துடன் இந்த படம் வெளியாகி இருக்கிறது. மதத்தின் நம்பிக்கையில் மூழ்கி கிடக்கும் ஒரு மனிதருக்கு ஏற்படும் மாற்றத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த படம் எடுக்கப்பட்டிருக்கிறது. முதலில் அப்துல் காதர் என்று தலைப்பு வைத்திருந்தனர். ஆனால் சில காரணங்களால் படத்திற்கு அயோத்தி என்று தலைப்பை மாற்றி படத்தை வெளியிட்டிருந்தனர். இந்த படத்தை பார்த்து விட்டு வெளியே வந்த பலரும் படம் மிக நன்றாக இருப்பதாகவும், சசிகுமார் கண்கலங்க வைத்துவிட்டார் என்றும், கிளைமாக்ஸ் காட்சிகளில் கண் கலங்கியதாகவும் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். நீங்களும் அந்த வீடியோவை காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!

 

YouTube Video Embed Code Credits: TN360

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்