அட்லீ மட்டும் தான் காபி அடிப்பாரா? நாங்க அவரு படத்தையே காபி அடிப்போம்..வசனம் கூட மாற்றாமல் அப்படியே காப்பி அடித்த சீரியல்

வெளியிட்டது

வர வர வெள்ளித்திரை தொடங்கி சின்னத்திரை வரை காப்பி அடிப்பது என்பது சகஜமாகி விட்டது. ஒரு மொழியில் வந்த படத்தை பார்த்து இன்னொருவர் காப்பியடிப்பது, ஒரு இசையை பார்த்து இன்னோருவர் இசையமைப்பது, ஒரு படத்தின் கதையை பார்த்து சின்னத்திரை சீரியல் எடுப்பது என்று எங்கும் காப்பி அடிப்பது நடந்து கொண்டே வருகிறது. இதில் முதலிடத்தைப் பிடிப்பவர் இயக்குனர் அட்லீ. தற்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் ஒரு தொடர் அட்லீ படத்தை வசனம் கூட மாற்றாமல் காப்பி அடித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

அட்லீ மட்டும் தான் காபி அடிப்பாரா? நாங்க அவரு படத்தையே காபி அடிப்போம்..வசனம் கூட மாற்றாமல் அப்படியே காப்பி அடித்த சீரியல் 1

2019ம் ஆண்டு ஜீ தமிழில் ஒளிபரப்பான தொடர்தான் சத்யா. ஆரம்பத்தில் சரியான வரவேற்பு இல்லாதபோதும் போக போக பிக் அப் ஆன தொடர்களில் ஒன்று. ஒரு சீசன் முடிந்து தற்போது இரண்டாவது சீசன் நடந்து வருகிறது. இதில் ஆயிஷா கதாநாயகியாகவும், கனா காணும் காலங்கள் புகழ் விஷ்ணு ஹீரோவாகவும் நடித்து வருகின்றனர். ஆண் சுபாவம் கொண்ட பெண்ணாக படு லோக்கலாக நடித்து அசத்தியிருப்பார் ஆயிஷா. இந்த நிலையில் இன்று வெளியான ப்ரோமோவை ஒன்று நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். அதில் ஹீரோயின் சத்யா தெறி படத்தில் பள்ளிக்கூடத்தில் ரவுடிகளை அடித்து வெளியே அனுப்பும் காட்சியை அப்படியே வசனம் மாறாமல் நடித்துள்ளதுதான்.

 

அட்லீ இயக்கத்தில் வெளிவந்த தெறி படம் செம்ம ஹிட் அடித்தது. அதில் ஒரு சீனில் பள்ளிக்கூட அறைகளில் ரவுடிகள் குடித்துவிட்டு சீட்டு ஆடிக் கொண்டிருப்பார்கள். அதை போலீஸ் அதிகாரியான விஜய் அடித்து துவைத்து வெளியே அனுப்புவார். அந்த காட்சியை வசனம் கூட மாற்றாமல் அப்படியே காப்பி அடித்துள்ளனர் சத்யா சீரியல். இதை பார்த்த நெட்டிசன்கள் அட்லீ மட்டும் காப்பி பண்ணா திட்டூறீங்க, இவங்க மட்டும் என்னடா பண்ணிருக்காங்க? என்று மரணமாக கலாய்த்து வருகின்றனர். ஏற்கனவே விஜய் டிவியில் ஒளிபரப்பான வேலைக்காரன் முத்து படத்தையும், பாண்டியன் ஸ்டோர்ஸ் ஆனந்தம் படத்தையும் அப்படியே காப்பி அடித்து எடுக்கப்பட்டது என்று நெட்டிசன்கள் கலாய்த்து வரும் நிலையில் இந்த வீடியோவையும் வச்சி செய்து வருகின்றனர் நெட்டிசன்கள்.. அந்த வீடியோவை நீங்களும் காண…Watch the below video..

Video Code Embed Credits: Zee5

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்