பெரிய திரை போலவே சின்னத்திரையிலும் வரும் சில நிகழ்ச்சிகள், தொடர்கள் ரசிகர்ளிடம் மிக பெரிய வரவேற்பை பெற்று வருகின்றன. குறிப்பாக நாடங்கங்களில் நடிக்கும் நடிகர், நடிகைகள் அந்த தொடர் வெற்றி அடைந்தால், மக்களிடம் மிக பெரிய அபிமானத்தையும், வரவேற்பையும் பெற்றுவிடுகிறார்கள். சில காலங்கள் முன்பு நாடகங்கள் என்றால் அது சன் டிவி தொடர்கள் தான். வெள்ளித்திரையில் மின்னிய நாயகிகள் ராதிகா, தேவயானி, ரம்யா கிருஷ்ணன் போன்றோர் கூட வாய்ப்புகள் சினிமாவில் குறைந்த பின் சின்னத்திரையில் தோன்றி அதிலும் மிக பெரிய வெற்றியை கண்டனர். ஆனால் நவீனமயமாகும் இந்த காலகட்டத்தில் மக்கள் வெவ்வேறு சேனல் தொடர்களையும் வெகுவாக வரவேற்று வருகிறார்கள்.

அந்த வகையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர் “சத்யா 2”. முதல் சீசன் தொடர் பெற்ற வெற்றி இப்பொது அது இரண்டாவது சீசன் வர வழிவகுத்துள்ளது. முதல் சீசனில், ரௌடியாக ஏரியாவில் மிகவும் அலப்பறை செய்யும் சத்யாவும், மிகவும் அமைதியான பணக்கார வீடு இளைஞன் ஒருவனும் காதலித்து எவ்வாறு திருமணம் செய்து வாழ்க்கையில் ஒன்றிணைகிறார்கள் என்பதே கதையாக இருந்தது.
அதில் சத்யாவாக ஆயிஷாவும், பிரபுவாக விஷ்ணுவும் நடித்து இருந்தனர். எப்போதும் போல வழக்கமான நாயகியாக தோன்றாமல் கிராப் கட்டிங் செய்து கொண்டு, அனைவரையும் மிரட்டி கொண்டு, இருப்பினும் நல்லவளாக இருக்கும் பெண்ணாக தோன்றி பலதரப்பட்ட ரசிகர்களையும் கவர்ந்தார் ஆயிஷா. டிக்டாக்கில் மிகவும் பிரபலமாக இருந்த இவர் இந்த தொடரில் நடித்து மிகவும் பிரபலமடைந்தார். இவரும், நடிகர் விஷ்ணுவிற்கும் இடையே இருந்த கெமிஸ்ட்ரி மிகவும் ரசிக்கப்பட தொடர் மிக பெரிய வரவேற்பை பெற்றது.
இப்போது இந்த தொடரின் இரண்டாவது பாகம் ஒளிபரப்பாக தொடர்ந்து அதுவும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பையே பெற்று வருகிறது. இதில் கொஞ்சம் கமர்சியல் கலந்து எடுத்து வருகிறார்கள். இப்போதெல்லாம் ஒளிபரப்பி வரும், தொடர்கள் பலவும் சினிமாவில் வரும் காட்சிகள் பலவற்றை அப்படியே காப்பி அடித்து அப்படியே எடுத்து வருகிறார்கள். இதனால் பலவற்றையும் ரசிகர்கள் கழுவி ஊத்தி வருகிறார்கள்.
இப்போது சத்யா சீரியலிலும் இந்த வழக்கத்தை கையில் எடுத்துள்ளனர். முதல் முயற்சியாக இவர்கள் போலீஸ்சாக மாஸ் காட்ட கையில் எடுத்த படம் விஜயின் “தெறி” படம். அந்த படத்தில் இடம்பெறும் ஸ்கூல் காட்சியை அப்படியே எடுத்து வைத்தார்கள். இதற்கு பலரும் தங்களுடைய எதிர்ப்புகளையும், கலாய்களையும் சொல்லி வந்தார்கள். இப்பொது அடுத்த ஃபர்னிச்சரை உடைக்க கையில் எடுத்துள்ளது அந்த தொடர்.
நடிகர் ரஜினியின் திரை வாழ்வில் மிக முக்கிய படம் “படையப்பா”. அப்போது வரை வெளியாகிய தமிழ் படங்களில் அதிக வசூல் எடுத்த படமாக இந்த படம் உருவெடுத்தது. ரஜினியின் நடிப்பு, ரம்யாகிருஷ்ணனின் மிரட்டும் வில்லத்தனம், கே.எஸ்.ரவிக்குமாரின் நேர்த்தியான கதையமைப்பு, ரஹ்மானின் இசை என அனைத்துமே ரசிகர்களை கவர படம் சரித்திர வெற்றியை பதிவு செய்தது.
அந்த படத்தில் இடம் பெரும் முக்கிய காட்சியாக உட்கார ஷேர் இல்லாமல் இருக்கும் ரஜினி, மேல் இருக்கும் ஊஞ்சலை துண்டால் எழுத்து போட்டு உட்காரும் காட்சி இன்றளவும் ரஜினி ரசிகர்களிடையே மிகவும் ரசிக்கப்படும் காட்சியாக இருக்கிறது. இதே காட்சியை தழுவி எடுத்தால் கூட பரவாயில்லை, இதே காட்சியை அப்படியே எடுத்து வைத்துள்ளார்கள் சத்யா 2 தயாரிப்பாளர்கள்.
Video Courtesy – ZeeTamil