Categories: சினிமா

மயிலு உன் நண்பன் வந்து இருக்கேன் டா.! கண்ணு தொறந்து பாருடா.! கதறி அழுத சத்யராஜ்.!

வெளியிட்டது

நடிகர் மயில்சாமிக்கு சிவன் என்றால் மிகவும் பிடிக்கும் சிவராத்திரி அன்றைக்கே அவருக்கு மோட்சம் கிடைத்து இருப்பதாக டிரம்ஸ் சிவமணி உருக்கமாக தெரிவித்து இருக்கிறார். தமிழ் சினிமாவில் குறிப்பிடத் தகுந்த நகைச்சுவை நடிகராக இருந்தவர் மயில்சாமி. இவரும் விவேக்கும் இணைந்து செய்த பல காமெடிகளில் மக்கள் மனங்களில் மிகவும் பிடித்திருக்கின்றது. சத்தியமங்கலத்தில் பிறந்து வளர்ந்தவர் நடிகர் மயில்சாமி. இவர் நடிப்பின் மீது இருக்கும் ஆர்வத்தின் காரணமாக சென்னைக்கு வந்து படங்களின் நடிக்க தொடங்கினார். இவர் தொலைக்காட்சியில் காமெடி டைம் என்கிற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தார். அந்த நிகழ்ச்சிக்கு பின்னர் இவர் பலராலும் அறியப்பட்டார். முதன்முதலாக 1984 ஆம் ஆண்டு தாவணிக் கனவுகள் என்கிற படத்தில் கூட்டத்தில் ஒருவராக நடிக்கும் வாய்ப்பை பெற்றார். பின்னர் இவர் 1989 ஆம் ஆண்டு வெற்றி விழா என்னும் படத்தில் குஷ்பூவுக்கு அண்ணன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அன்று தொடங்கி இன்று வரை சுமார் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து முடித்து இருக்கிறார் மயில்சாமி.

மயிலு உன் நண்பன் வந்து இருக்கேன் டா.! கண்ணு தொறந்து பாருடா.! கதறி அழுத சத்யராஜ்.! 1

குறிப்பிட்ட சொல்ல வேண்டும் என்றால் விவேக் உடன் இணைந்து இவர் செய்த பல காமெடிகள் மக்கள் மத்தியில் இன்றளவும் பிரபலமாக இருக்கிறது. 57 வயதாகும் மயில்சாமி நேற்று இரவு டிரம்ஸ் சிவமணியுடன் இணைந்து சிவராத்திரி இரவில் பாட்டுகள் பாடியும், கச்சேரிகள் நடத்தியும் வந்தார். இந்த நிலையில் இன்று காலை அவர் தனது வீட்டிற்கு திரும்பும் வழியில் உள்ள டீக்கடையில் டீ குடித்துக் கொண்டிருந்தபோது திடீரென அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டிருக்கிறது. நெஞ்சை பிடித்துக் கொண்டு கீழே சரிந்த அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற போது அவர் உயிர் பிரிந்து விட்டதாக கூறப்படுகிறது. அவரின் இறப்பிற்கு ரசிகர்கள் தொடங்கி பிரபலங்கள் என பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். நாளை காலை அவரது இறுதிச் சடங்குகள் நடைபெற இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இந்த நிலையில் அவரது இறப்பு குறித்து பேசி இந்த நிலையில் அவரது இறப்பு குறித்து பேசிய ட்ரம்ஸ் சிவமணி கண்கலங்கி பேசியிருந்தார்.

மயில்சாமி இந்த முறை சிவராத்திரிக்கு திருவண்ணாமலை செல்லவில்லை. கேளம்பாக்கத்தில் உள்ள சிவன் கோயிலுக்கு செல்லலாம் என்று கூறினார். நாங்கள் இருவரும் சிவன் கோயிலுக்கு சென்று விடிய விடிய பாடல்களை பாடி சிவனின் அருளை பெற்றோம். அதிகாலை 3 மணி அளவில் அவர் வீட்டிற்கு புறப்பட்டு சென்றார். அப்போது கூட மயில்சாமிக்கு நன்றி சொல்லி ஒரு வாய்ஸ் மெசேஜ் அனுப்பி இருந்தேன். திடீரென ஐந்து மணி அளவில் அவரின் மொபைலில் இருந்து எனக்கு ஒரு கால் வந்திருந்தது. இசை கச்சேரியை முடித்து விட்டேன் என கூறலாம் என்று அழைப்பை எடுத்துப் போது அவர் இறந்துவிட்டார் என்று செய்தி கிடைத்தது. விவேக் சாரை இந்த கோயிலுக்கு அழைத்து வந்திருக்கிறேன், உன்னையும் அழைத்து வந்து விட்டேன், எனது கடைசி ஆசை ரஜினிகாந்தை இந்த கோயிலுக்கு அழைத்து வரவேண்டும் என்பதுதான் என்று மயில்சாமி கூறியதாக ட்ரம்ஸ் சிவமணி கூறினார். சிவன் என்றால் அவருக்கு மிகவும் பிடிக்கும் சிவனுக்கு உகந்த நாளிலேயே அவருக்கு மோட்சம் கிட்டியுள்ளது, அவரது ஆத்மா சாந்தி அடையட்டும் என்று சிவமணி தெரிவித்தார்.

மயில்சாமியின் உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த பல பிரபலங்களும் கண்கலங்கி அஞ்சலி செலுத்தியிருந்தனர். குறிப்பாக எம்எஸ் பாஸ்கர், மனோபாலா உள்ளிட்ட பலர் அவரின் இறப்பை எண்ணி கண்கலங்கி இருந்தனர். தற்போது சத்யராஜும் மயில்சாமியின் மறைவு தாங்காமல் கதறி கதறி அழுது இருக்கும் வீடியோ பார்ப்பவர்கள் நெஞ்சை கதறி பிழிந்துள்ளது. நீங்களும் அந்த வீடியோவை காண.! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும். Watch the Below Video.! 

Youtube Video Embed code Credits: Viral Videos 3.O

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்