டான் படத்தில் வரும் gun பிராங்க் சீனின் மேக்கிங் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் இப்பொது இருக்கும் இளம் நடிகர்களில் முன்னணியில் இருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன். எந்த வித பின்புலமும் இன்றி, தன்னுடைய மீடியா வாழ்க்கையை விஜய் டிவியில் நகைச்சவை ஆர்டிஸ்டாக துவங்கிய அவர் பின் நட்சத்திர தொகுப்பாளராக உருவெடுத்து மக்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்றார். பின் மெல்ல இயக்குனர் பாண்டியராஜின் “மெரினா” படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானார்.பின் நடிகர் தனுஷின் தயாரிப்பான “எதிர்நீச்சல்” படம் மூலம் தனியாக நாயகனாக மாறினார். பின்னர் சில படங்கள் நடித்தாலும் இவரை மக்கள் நாயகனாக ஏற்றுக்கொண்ட படம் “வருத்தப்படாத வாலிபர் சங்கம்” படம் மூலமே. தனி ஹீரோவாக இவர் அடுத்தடுத்து நடித்த “எதிர் நீச்சல், காக்கி சட்டை, ரஜினி முருகன், நம்ம வீடு பிள்ளை, டாக்டர்” என அனைத்துமே தொடர் வெற்றிப்படங்கள். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக கடைசியாக வெளியான டாக்டர் படம் இவருடைய முதல் 100 கோடி வசூல் படமாக மாறியது. அந்த வெற்றியை தொடர்ந்து கடந்த மே 13ஆம் தேதி வெளியான “டான்” படமும் 100 கோடி கிளப்பில் சேர்ந்தது. சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன், எஸ்.ஜே.சூர்யா, பாலசரவணன், சிவாங்கி என பலர் நடிப்பில் வெளியான இந்த படம் அறிமுக இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் வெளியானது. காமெடி படமான இதில் காமெடி, பாடல்கள், காதல் காட்சிகள் என சிறப்பாக இருந்தாலும், படத்தின் இரண்டாம் பாதியில் வரும் கடைசி 30 நிமிட செண்டிமெண்ட் காட்சியை வைத்தே படம் இவ்வளவு பெரிய வெற்றியை பதிவு செய்துள்ளது. குறிப்பாக சமுத்திரக்கனி, சிவகார்திகேயனின் நடிப்பு, அனிருத்தின் மனதை வருடும் இசை, இயக்குனர் சிபியின் எழுத்து என அனைத்துமே மிகவும் சிறப்பாக அமைந்ததால் மட்டுமே படம் மிகவும் கொண்டப்பட்டது.

அனைவரும் அந்த கடைசி 30 நிமிடங்கள் தான் படத்தை தூக்கி நிற்க வைக்கிறது என்று கூறினர். விமர்சனங்களும் அதையே கூறியது. படமும் சிறப்பான வெற்றியை பதிவு செய்தது. ரசிகர்களும் படத்தை கொண்டாடி தீர்த்தனர். திரையரங்கில் வெற்றிகரமாக ஓடி முடித்தது. இப்பொது கடந்த 10ஆம் தேதி படம் OTT தளத்தில் வெளியாகியுள்ளது. Netflix OTT தளத்தில் இந்த படம் வெளியானது. தற்போது இந்த படத்தில் வரும் gun பிராங்க் சீனின் மேக்கிங் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. எஸ்ஜே சூர்யாவை துப்பாக்கி வைத்து மிரட்டும் சீனை எவ்வாறு உருவாக்கியுள்ளனர் என்று மேக்கிங் வீடியோ வெளியாகியுள்ளது. அந்த வீடியோவை நீங்களும் காண..Watch the below video…
Youtube Video Code Embed Credits: Sivakarthikeyan productions