நடிகர் கமலஹாசனுக்கு ஆதரவாக சீமான் கருத்து தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கமல் செய்ததில் ஒரு தவறும் இல்லை என்று சீமான் கூறியுள்ளார். உலகநாயகன் கமல் நடிப்பில் வெளியாக உள்ள திரைப்படம் “விக்ரம்”. இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். இந்த படத்தின் அனைத்து பணிகளும் முடிந்து ஜூன் 3ம் தேதி திரையரங்குகளில் படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே வெளியான படத்தின் டீசர் மற்றும் ப்ரோமோ காட்சிகள் மில்லியன் பார்வையாளர்களை கடந்து சென்று கொண்டுள்ளது.

இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு பத்தல பத்தல பாடல் வெளியானது. வெளியான சில மணி நேரங்களில் பல லட்சம் பார்வையாளர்களை கடந்துள்ள இந்த பாடலை கமலே எழுதியுள்ளார். நீண்ட இடைவெளிக்குப் பின் ஆண்டவர் போட்ட குத்து சாங் என்று நெட்டிசன்கள் பகிர்ந்து வருகின்றனர். இந்த நிலையில் இந்த பாடல் மத்திய அரசுக்கு எதிரான வாசகங்களை கொண்டிருப்பதாக கூறி சென்னை காவல் ஆணையத்தில் புகார் ஒன்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பத்தல பத்தல எனத் தொடங்கும் அந்த பாடல் மத்திய அரசை விமர்சிக்கும் வண்ணம் இருப்பதாக சென்னை காவல் ஆணையரிடம் ஆன்லைன் மூலம் புகார் அளித்திருந்தார். Youtube Video Code Embed Credits: Thanthi Tv
இந்த நிலையில் அது குறித்து சீமானிடம் கருத்து கேட்கப்பட்டது. அப்போது அவர் கமல் எழுதியதில் என்ன தவறு இருக்கிறது என்றும், ஒன்றிய அரசு எதுல ஒழுங்காக இருக்கிறது என்றும், ஒன்றிய அரசு குறித்தான கமல் கருத்தை நான் ஆதரிக்கிறேன் என்றும் அவர் கூறினார். மேலும் கமலுக்கு ஆதரவு அளிப்பீர்களா என்று கேட்டபோது பாடலில் உள்ள கருத்துக்கு மட்டும்தான் ஆதரவு எனக் கூறினார். கமலுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்றால் முதலில் அவர் இந்தியரா? திராவிடரா? தமிழரா? என்பதை தெளிவு படுத்த வேண்டும் என்றும் கூறினார். அந்த வீடியோவை நீங்களும் காண.. Watch the below Video..