Categories: சினிமா

செல்வராகவன் நடிப்பில் உருவாகியுள்ள ‘பாகாசூரன்’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.!

வெளியிட்டது

இயக்குனர் மோகன் ஜி தயாரிப்பில் உருவாகியுள்ள படம் தான் பாகாசூரன். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகி இருக்கிறது. மேலும் இந்த படத்தின் டிரைலர் வருகிற ஆகஸ்ட் 28ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 31ஆம் தேதி தமிழகமெங்கும் இந்த படம் வெளியாக இருக்கிறது. தமிழ் சினிமாவின் மிகப் பிரபலமான இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர் செல்வராகவன் அவர்கள். இவர் தற்போது தனுஷை வைத்து ‘நானே வருவேன்’ என்கிற படத்தை இயக்கி முடித்துள்ளார். இந்த படம் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிந்து போஸ்ட் ப்ரொடக்ஷன்ஸ் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. இந்தப் படத்தில் தனுஷ் இரட்டை வேடங்களில் நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

bakasuran first look

இந்த நிலையில் சர்ச்சைக்குரிய இயக்குனர் மோகன் ஜி இயக்கியுள்ள பாகாசூரன் படத்தில் செல்வராகவன் கதாநாயகனாக நடித்திருக்கிறார். இதன் அறிவிப்பு போஸ்டரில் மகாபாரதத்தில் வரும் கிருஷ்ணர் போஸ்டரை வெளியிட்டு இருந்தார் மோகன்ஜி. இந்தப் படத்தை படத்தில் நட்டி நட்ராஜ் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். ஷான் சி எஸ் இசையமைத்து இருக்கிறார். திரௌபதி என்ற படத்தை இயக்கியதன் மூலமாக பிரபலமானவர் தான் இயக்குனர் மோகன் ஜி. இந்த படம் பெண் அடிமைத்தனங்கள் மற்றும் நாடக்க் காதல் போன்ற பிற்போக்குத்தனங்களை கொண்டுள்ளது என்று பலரும் இந்த படத்தை விமர்சித்தனர். இதனால் கிடைத்த நெகட்டிவ் விமர்சனங்களால் இந்த படம் மிக நன்றாக வசூலை குவித்தது. பின்னர் அடுத்ததாக ருத்ர தாண்டவம் என்ற படத்தையும் எடுத்தார். அந்த படமும் சர்ச்சைக்கு உள்ளானது. தொடர்ந்து சர்ச்சையாக படங்களை எடுத்து வரும் மோகன் ஜியின் இயக்கத்தில் அடுத்து வெளியாக இருக்கிறது பாகாசூரன்.

எப்பொழுதும் ரிச்சர்ட் ரிஷியை ஹீரோவாகக் கொண்டு படம் எடுப்பார் மோகன்ஜி. ஆனால் இந்த முறை வித்தியாசமாக இயக்குனர் செல்வராகவனை வைத்து படத்தை இயக்கியிருக்கிறார். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் தற்போது வெளியாக இருக்கிறது. அதில் கழுத்தில் ருத்ராட்சங்களுடன் செல்வராகவன் நிற்பது போன்று புகைப்படம் வெளியாகியிருக்கிறது. இதனால் இந்த படமும் ஏதாவது ஒரு மதம் அல்லது சாதியை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டிருக்க கூடும் என்று எதிர்பார்ப்பு நிலவுகிறது. படத்தின் அதிகாரப்பூர்வ டிரைலர் வருகிற ஆகஸ்ட் 28ஆம் தேதி காலை 10 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. திரைப்படம் ஆகஸ்ட் 31ம் தேதி வெளியாகிறது.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்