தனது இரட்டை மகள்களின் 5வது பிறந்தநாளை வெகு விமர்சையாக கொண்டாடிய நடிகர் பிரஜின்.!

வெளியிட்டது

நடிகரும் நிகழ்ச்சி தொகுப்பாளருமான பிரஜின் தனது இரட்டை மகள்களின் பிறந்தநாளை வெகு விமர்சையாக கொண்டாடி இருக்கிறார்.  அந்த புகைப்படங்கள் தற்போது வெளியாகி லைக்குகள் குவிந்து வருகிறது.

தனது இரட்டை மகள்களின் 5வது பிறந்தநாளை வெகு விமர்சையாக கொண்டாடிய நடிகர் பிரஜின்.! 1
தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சி தொகுப்பாளராக வாழ்க்கையைத் தொடங்கி இன்று தமிழின் குறிப்பிடத்தகுந்த நடிகராக இருப்பவர் நடிகர் பிரஜின். இவர் பல படங்களில் நடித்திருந்த போதிலும் இவருக்கான சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.


கேரளாவில் பிறந்து வளர்ந்த பிரஜின், சன் தொலைக்காட்சியில் வீடியோ ஜாக்கியாக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். பல ஆண்டுகளாக தொகுப்பாளராக இருந்து வந்த அவர் ‘டிஷ்யூம்’ என்கிற படத்தின் மூலமாக நடிகராக அறிமுகமானார்.

பின்னர் ‘சா பூ த்ரீ, ‘திரில்லர்’, ‘மணல் நகரம்’, ‘பழைய வண்ணாரப்பேட்டை’, ‘ஆண் தேவதை’ போன்ற படங்களில் நடித்திருக்கிறார். மலையாளத்தில் ‘த்ரில்லர்’, ‘டோரணமண்ட்’, ‘சாண்ட் சிட்டி’, ‘லவ் ஆக்சன் டிராமா’ போன்ற படங்களிலும் நடித்து முடித்திருக்கிறார்.


இவர் கடைசியாக 2023ம் ஆண்டு வெளியான ‘டி3’ மற்றும் ‘அக்கு’ என்கிற இரண்டு படங்களில் நடித்திருந்தார். பல படங்களில் நடித்து வரும் பொழுதும் இவருக்கு சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.


இது மட்டுமல்லாமல் சின்னத் திரையில் ‘இது ஒரு காதல் கதை’, ‘காதலிக்க நேரமில்லை’, ‘ஜோடி நம்பர் ஒன்’, ‘கோகுலத்தில் சீதை’, ‘சின்னத்தம்பி’, ‘அன்புடன் குஷி’, ‘வைதேகி காத்திருந்தாள்’, ‘தவமாய் தவமிருந்து’ ஆகிய நாடகங்களில் நடித்திருக்கிறார்.


இதில் இவருக்கு திருப்புமுனையாக அமைந்த ஒரு தொடர் என்று சொன்னால் அது ‘காதலிக்க நேரமில்லை’ தான். இந்த தொடரின் டைட்டில் பாடலான ‘என்னைத தேடி காதல் என்ன வார்த்தை அனுப்பு..’ என்கிற பாடலை பலரும் ரிங்டோனாக வைத்திருந்த காலங்களும் உண்டு.


பின்னர் பிரஜினுக்கு ‘சின்னத்தம்பி’ மற்றும் ‘அன்புடன் குஷி’ ஆகிய இரண்டு சீரியல்களும் நல்ல வரவேற்பு பெற்றுக் கொடுத்தன. தொடர்ந்து சில படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். இந்த நிலையில் பிரஜினுக்கு சான்ட்ரா என்கிற பெண்ணுடன் 15 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் ஆனது.


இந்த தம்பதிகளுக்கு ருத்ர பாலா மற்றும் மித்ரா பாலா என்கிற இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர்.


இந்த நிலையில் தனது இரட்டை குழந்தைகளின் 5வது பிறந்தநாளை வெகு விமர்சையாக கொண்டாடி இருக்கிறார் பிரஜின்.

அந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அவர் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். பலரும் பிரஜின் மகள்களின் பிறந்தநாளுக்கு தங்களது வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

Youtube Video Embed Code Credits: Viral Videos 3.O

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்