Categories: சினிமா

நயன்தாராவின் குழந்தைகளை பார்க்க ஓடோடி வந்த ஷாருக்கான்.! முத்தமிட்டு வழியனுப்பிய நயன்.!

வெளியிட்டது

பாலிவுட்டின் சூப்பர் ஸ்டாராக இருக்கும் நடிகர் ஷாருக்கான் நேற்று இரவு நயன்தாராவிற்கு திடீரென சர்ப்ரைஸ் விசிட் அடித்திருக்கிறார்ர இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ஹாலிவுட் உலகின் சூப்பர் ஸ்டார் ஆக இருக்கும் நடிகர் ஷாருக்கான் தற்போது நயன்தாராவுடன் இணைந்து ஜவான் என்கிற படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் பிரபல தமிழ் இயக்குனர் அட்லீயால் இயக்கப்பட்டு வருகிறது. இந்திய திரையுரகில் அசைக்க முடியாத இடத்தில் இருப்பவனர் நடிகர் ஷாருக்கான். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் பதான் மிகப்பெரிய வெற்றியடைந்தது. நான்கு ஆண்டுகளாக எந்த படத்திலும் கமிட்டாகாமல் இருந்து வந்த ஷாருக்கானுக்கு பதான் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை தேடி கொடுத்துள்ளது. இந்த படத்தை காண தியேட்டருக்கு அலை அலையாய் மக்கள் திரண்டு சென்றனர். பதான் படத்தின் பாடல் வெளியான போதே பெரும் சர்ச்சையில் சிக்கியது. ஆனாலும் இந்த படத்தை மக்கள் குடும்பம் குடும்பமாக சென்று பார்த்து வருகின்றனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நயன்தாராவின் குழந்தைகளை பார்க்க ஓடோடி வந்த ஷாருக்கான்.! முத்தமிட்டு வழியனுப்பிய நயன்.! 1
இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்ததாக அட்லீ இயக்கத்தில் ஜவான் என்கிற படத்தில் நடித்து வருகிறார் ஷாருக்கான். இந்த படத்துக்காக கடந்த மூன்று ஆண்டுகளாக அங்கேயே வசித்து வருகிறார் அட்லீ. இந்த படத்தில் கதாநாயகியாக நயன்தாரா நடிக்கிறார். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் தீபிகா படுகோன் நடிக்கிறார். பல முன்னணி நடிகர்கள் நடித்து வருவதால் இந்த படத்திற்கு எதிர்பார்ப்பு எகிறி இருக்கிறது. மேலும் இறுதியாக விஜய் சேதுபதி வில்லனாக இந்த படத்தில் இணைந்திருக்கிறார். இந்த படத்தின் டீசர் கடந்தாண்டு வெளியானது தொடங்கி இன்று வரை ஆவல் குறையாமல் இருக்கிறது. இந்த படம் வருகிற ஜூன் இரண்டாம் தேதி வெளியாக இருக்கிறது. ஜவான் படத்துக்காக அடிக்கடி சென்னையில் இருந்து மும்பைக்கு ஷூட்டிங்கிற்காக சென்று வந்தார் நயன்தாரா. இந்த நிலையில் நேற்று இரவு மும்பையில் இருந்து சென்னை வந்த ஷாருக்கான் திடீர் சர்ப்ரைஸாக நயன்தாரா வீட்டிற்கு விசிட் அடித்தார். நயன்தாராவிற்கு கடந்த அக்டோபர் மாதம் இரட்டைக் குழந்தைகள் பிறந்த நிலையில் அந்த குழந்தைகளை பார்ப்பதற்காக விசிட் அடித்திருக்கிறார் ஷாருக்கான்.


ஷாருக்கான் வந்த செய்தி கேட்டு நயன்தாரா வீட்டின் முன்பு ரசிகர்கள் படையெடுக்க தொடங்கினர். வெகுநேரமாக அவர்கள் நயன்தாரா வீட்டு வாசலில் காத்திருந்தனர். குழந்தைகளை பார்த்துவிட்டு வெளியே வந்த ஷாருக்கான் அங்கு திரண்டு இருந்த ரசிகர்களை பார்த்து கையசைத்தார். பின்னர் அவர் காரில் ஏறும் வரை காத்திருந்து ஷாருக்கானுக்கு முத்தம் கொடுத்து வழி அனுப்பி வைத்தார். கடந்த ஜனவரி 31ஆம் தேதி இயக்குனர் அட்லிக்கு குழந்தை பிறந்தது. அந்த குழந்தையும் நேரில் சென்று பார்த்த ஷாருக்கான், தனது ட்விட்டர் பக்கத்தில் அட்லியின் குழந்தையை பார்த்தேன், குழந்தை அழகாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கிறது என்று பதிவிட்டு இருந்தார். இந்த நிலையில் அவர் தன்னுடன் நடிக்கும் நயன்தாராவின் குழந்தைகளையும் பார்க்க வந்திருப்பது நயன்தாராவின் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. Watch the Below Video.! 

Youtube Video Code Embed Credits: Viral Videos 3.O

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்