Categories: அரசியல்

சிவாஜி கணேசனின் நிலை தான் கமலுக்கு ஏற்படும்!!

வெளியிட்டது
சிவாஜி கணேசனின் நிலை தான் கமலுக்கு ஏற்படும்!! 1

”நடிகர் சிவாஜி கணேசனுக்கு, அரசியலில் ஏற்பட்ட நிலை தான், கமலுக்கும் ஏற்படும்,” என, முதல்வர் பழனிசாமி கமலை வைத்து சாடியுள்ளார். சேலத்தில் நடைபெற்ற, திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற, முதல்வர் பழனிசாமி நேற்று காலை, ஓமலுார், அ.தி.மு.க., புறநகர் கட்சி அலுவலகத்தில், நிர்வாகிகளுடன், உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக ஆலோசித்து வந்தார்.பின்னர், அவர் அளித்த பேட்டியில், உள்ளாட்சி தேர்தலை நடத்த, தன்னாட்சி பெற்ற தேர்தல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள், தேதியை அறிவிப்பர்.

உள்ளாட்சி தேர்தலில் அதிகமானோர் போட்டியிட உள்ளதால், முன்கூட்டியே அ.தி.மு.க.,வில் விருப்ப மனு வாங்கப்பட்டது.அ.ம.மு.க.,விலிருந்து பலர், கட்சியில் இணைய பேச்சு நடத்தி வருகின்றனர். அ.ம.மு.க., என்பது, கட்சியே கிடையாது என்று கூறியிருந்தார்.

அமெரிக்காவில் பேசும்போது, ‘நான், மோடி நாட்டிலிருந்து வந்துள்ளேன்’ என, தேனி எம்.பி., ரவீந்திரநாத் கூறியதில் தவறில்லை. தமிழகத்தில் சாலை விரிவாக்கம் செய்ய, உயர் மின் கோபுரம் அமைக்க, நிலம் கையகப்படுத்த முடியவில்லை. மக்கள் எதிர்ப்பு தெரிவிப்பதால், திட்டத்தை நிறைவேற்ற முடியவில்லை. மக்களும், ஊடகங்களும், அரசுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். ‘வெற்றிடம்’ எனக் கூறும், நடிகர் கமல், விக்கிரவாண்டி, நாங்குனேரி இடைத்தேர்தலில் ஏன் போட்டியிடவில்லை?  என்று கேள்வி எழுப்பினார்.

திரைத் துறையில் சம்பாதித்த பின், அவருக்கு வயதாகிவிட்டது. படத்தில் நடிப்பதற்கு , தகுந்த வாய்ப்பில்லாத நிலையில் , அரசியலுக்கு வந்துள்ளார்.தமிழகத்தில் எத்தனை கிராமங்கள், என்னென்ன பிரச்னை உள்ளது என்பது கூட, அவருக்கு சரியாக தெரியாது. நடிகர் சிவாஜி கணேசனுக்கு, அரசியலில் ஏற்பட்ட நிலை தான், கமலுக்கும் ஏற்படும். இவ்வாறு, முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.

Vinoth Kumar

தன்னம்பிக்கை தான் வெற்றிக்கு முக்கியமாகும் 😎😎😎 பேனா 🖊️ மை உலகை மாற்றும் As a digital journalist born and raised in Tamil Nadu, I'm on a mission to leverage the digital age to bring you the most relevant and personalized news coverage, all while staying true to our Tamil roots.

வெளியிட்டது

புதிய செய்திகள்