மறைந்த சூப்பர் ஸ்டார் விஜயகாந்த் நினைவிடத்தில் தற்போது ராஜலட்சுமி மற்றும் செந்தில் கணேஷ் தம்பதிகள் அஞ்சலி செலுத்துவிட்டு, அவருக்காக மனம் உருகி பாடல் ஒன்றையும் பாடி இருக்கின்றனர். அந்த காணொளியை தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. திரையுலகிலும், அரசியல் உலகிலும் வெறுப்பையே சம்பாதிக்காத ஒரு மனிதர் தான் கேப்டன் விஜயகாந்த். சில ஆண்டுகளாக உடல் நலக் குறைவால் அவதிப்பட்டு வந்த அவர் கடந்த மாதம் 28ம் தேதி திடீரென காலமாகியிருந்தார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

அவரது மறைவுக்கு திரை பிரபலங்கள் மற்றும் அரசியல் பிரபலங்கள் என பலரும் இரங்கல்களை தெரிவித்தனர். மேலும் எந்த தலைவருக்கும் கூடாத அளவிற்கு சுமார் 15 லட்சம் மக்கள் அவரது இறுதிச் சடங்கில் பங்கேற்றதாக கூறப்பட்டது. கேப்டன் உடல் தீர்வு திடலில் இருந்து தேமுதிக அலுவலகம் நோக்கி வரும் வரை வழிநெடுகிலும் பல லட்சம் மக்கள் திரண்டு மலர் தூவி அவருக்கு அஞ்சலி செலுத்தினர். இந்த நிலையில் இன்று காலை சூப்பர் சிங்கரில் கலந்து கொண்ட பிரபல பாடகர்களாக இருக்கும் செந்தில் கணேஷ் மற்றும் ராஜலட்சுமி தம்பதிகள் இன்று தேமுதிக அலுவலகத்தில் உள்ள விஜயகாந்த் நினைவிடத்திற்கு வருகை தந்தனர்.

கேப்டனுக்கு அஞ்சலி செலுத்திய பின்னர் அவர்கள், “ஏழைகள் வாழ நீ செய்த தியாகம்..” என்கிற பாடலை மனம் உருகி பாடினர். அந்த காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. நீங்களும் அந்த வீடியோவைக் காண…! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்…! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Archieves of Hindustan