மலையாளத் திரையுலகில் பிரபல நடிகராக வலம் வரும் ஷைன் டாம் சாக்கோவிற்கு தற்போது திருமண நிச்சயதார்த்தம் முடிந்திருக்கிறது. அந்தப் புகைப்படங்களை அவரே தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். 40 வயதான அவருக்கு தற்போது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்திருக்கிறது.

2002ம் ஆண்டு ‘நம்மல்’ என்கிற படத்தில் குழு நடிகராக அறிமுகமானார். பின்னர் 2011ம் ஆண்டு வெளியான ‘கட்டம்மா’ என்கிற படத்தில் மூலமாக திரையுலகுக்கு அறிமுகமானார்.

அதன் பின்னர் தொடர்ந்து பல படங்களில் நடித்திருக்கும் அவர் தமிழில் ‘பீஸ்ட்’ என்கிற படத்தின் மூலமாக அறிமுகமானார். இந்த படத்தில் தீவிரவாதியாகவும், வில்லனாக இவர் நடித்து அசத்தியிருந்தார்.

அதன் பின்னர் ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ படத்தில் நடித்திருக்கிறார். தற்போது கைவசம் ‘மலையாளி ஃபிரம் இந்தியா’, ‘ஐயர் கண்ட துபாய்’, ‘தேவாரா’ போன்ற பல படங்களில் நடித்திருக்கிறார்.

மேலும் இவர் ‘பீஸ்ட்’ படத்தில் நடித்த போது நடிகர் விஜய் இவரை ஒரே கையில் தூக்கி வருவது போல ஒரு காட்சி வைக்கப்பட்டிருக்கும். அந்த காட்சியை இவர் கடுமையாக விமர்சித்து இருந்தார்.

ஒரு மனிதர் எப்படி இன்னொரு மனிதரை ஒரே கையில் தூக்கி வர முடியும்? கொஞ்சம் கூட லாஜிக்கே இல்லாத படம் என்று ‘பீஸ்ட்’ படத்தை விமர்சித்திருந்தார். இப்படி தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கி வரும் அவர், தற்போது தனது நீண்ட நாள் காதலியும் மாடல் மற்றும் நடிகைமான தனுஜா என்பவரை திருமணம் செய்ய இருக்கிறார்.

இவர்களது திருமணம் நிச்சயதார்த்தம் நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் நடந்திருக்கிறது. தனது காதலியுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார். அவருக்கு ரசிகர்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.