Facebookல request கொடுத்து லவ் பண்றேன்னு சொன்னான்..bad boyன்னு நினச்சேன்..அர்ஜுன் லவ் சொன்னதை Cute ஆக சொன்ன ஸ்ருதிகா

வெளியிட்டது

குத் வித் கோமாளியில் கலந்து கொண்டு பலரின் உள்ளங்களை கவர்ந்துள்ளவர் ஸ்ருதிகா. இவர் பழம்பெரும் நகைச்சுவை நடிகர் தேங்காய் சீனிவாசனின் பேத்தி ஆவார். முதல் படமே தமிழில் சூர்யாவுடன் ஸ்ரீ என்ற படத்தில் அறிமுகமானார். முதல் படமே தோல்வியை சந்தித்தது. இருந்தாலும் மனம் தளராமல் நளதமயந்தி, ஆல்பம், தித்திக்குதே படங்களில் நடித்தார். இந்த படங்களும் தொடர் தோல்வியை சந்திக்கவே திரைத்துறையில் இருந்து முற்றிலும் விலகிவிட்டார். ஆனால் இவர் நடித்த செல்லமே செல்லம் என்றாயடா பாடல் இன்றளவும் பிரபலமானது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Facebookல request கொடுத்து லவ் பண்றேன்னு சொன்னான்..bad boyன்னு நினச்சேன்..அர்ஜுன் லவ் சொன்னதை Cute ஆக சொன்ன ஸ்ருதிகா 1

தற்போது நீண்ட இடைவெளிக்குப் பின்பு ஸ்ருதிகாவிற்கு சின்னத்திரையில் மிகப்பெரிய வாய்ப்பு கிடைத்தது. குத் வித் கோமாளியில் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டு அசத்தி வருகிறார். தான் நடித்த படங்கள் அனைத்துமே தோல்விதான் என்று பல பேட்டிகளில் அவரே சொல்லி சிரிப்பார். குத் வித் கோமாளிக்கு வந்த பிறகு ஸ்ருதிகாவின் செல்வாக்கு சற்று உயர்ந்துள்ளது என்றே கூறலாம். அவரின் வெள்ளந்தியான பேச்சும், சிரிப்பும், குரேஷியுடன் சேர்ந்து அவர் செய்யும் காமெடிகள் அவருக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளது.

இவரின் கணவர் அர்ஜூன். இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இரண்டு நாட்களுக்கு முன்பு லைவ்வில் வந்த அவரிடம் காதல் கதை குறித்து ரசிகர்கள் கேட்டனர். அர்ஜூனை முதன்முதலில் ஃபேஸ்புக்கில்தான் பார்த்தேன். முதலில் சோசியல் மீடியாவில் அர்ஜூன் request கொடுத்ததால் அவரை கெட்டவர் என நினைத்தேன். பின்னர் அவருடன் பழகிய பின்புதான் அவர் நல்லவர் என தெரிந்தது எனக் கூறினார். Watch the below video..

Youtube Video Code Embed Credits: Little Talks

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்