தமிழ் சினிமாவில் ஸ்ரீ படத்தின் மூலம் அறிமுகம் ஆகியவர் ஸ்ருத்திகா அர்ஜுன். இவருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே தற்போது உருவாகி உள்ளது. குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டு பல ரசிகர்களின் இதயங்களை கொள்ளை கொண்டுள்ளார். இந்த நிகழ்ச்சிக்கு பிறகு, பலராலும் அறியப்பட்டவர் ஆகினார் ஸ்ருதிகா. தற்போது இவருக்கு ஹிந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியில் வாய்ப்புகிடைத்தது . வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

அங்கும் ஹிந்தி ரசிகர்களை கவர்ந்து பல நாட்களாக பிக் பாஸ் வீட்டிற்குள் இருந்து வந்தார். இறுதியாக ஸ்ருதிகா வெற்றிபெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்நிகழ்ச்சியை விட்டு வெளியேறி உள்ளார். இது இவரின் ரசிகர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. தற்போது இவர் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய நிலையில், இவரது குடும்பத்தினர் பலத்த வரவேற்பு கொடுத்துள்ளனர்.
இந்த வீடியோவை ஸ்ருதிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.