சில்லுனு ஒரு காதல் பூமிகா கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்த நடிகை யார் தெரியுமா?

வெளியிட்டது

தமிழ் திரைப்படங்களில் காதல் திரைப்படங்களுக்கு பெரிதும் எப்போதும் ஒரு எதிர்பார்ப்பு உள்ளது. அதில் மக்களின் வரவேற்பு பெற்று 14 ஆண்டுகள் பிறகும் மக்கள் மனதில் இடம் பிடித்த திரைப்படம் கௌதம் வாசுதேவ் மேனனின் துணை இயக்குநர் கிருஷ்ணா இயக்கிய சில்லுனு ஒரு காதல் திரைப்படம். சூரியா, ஜோதிகா, பூமிக்கா ஆகியோர் நடிப்பில் வெளிவந்த இந்த திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

சில்லுனு ஒரு காதல் பூமிகா கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்த நடிகை யார் தெரியுமா? 1

இதில் உள்ள காதல் காட்சிகள் அனைத்தும் மனம் உருக வைக்கும். அதிலும் சூரியா மற்றும் பூமிக்கா அவர்களின் காதல் கதை படத்தின் அருமையான பாகமாக இடம் பெற்றது. இந்நிலையில் தற்போது இந்த படத்தை பற்றிய சுவாரசியமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. இந்த படத்தில் பூமிக்கா சிங் கதாப்பாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்த நடிகை அசின் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

சில தவிர்க்க முடியாத காரணங்களால் அசின் இந்த திரைப்படத்தை விட்டு விலகிவிட்டார் என்று கூறப்படுகிறது. ஆனால் இந்த கதாபாத்திரம் நடிகை அசினிற்கும் கச்சிதமாக இருந்துருக்கும். அசின் இதை ஏற்று நடித்திருந்தால் நிச்சயம் நன்றாக இருந்திருக்கும். ஏனெனில் ஏற்கனவே சூர்யா அசின் ஜோடியாக நடித்து வெற்றிபெற்ற திரைபடம் கஜினி. அதை தொடர்ந்து வேல் திரைப்படத்திலும் இருவரும் ஜோடியாக நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Kiruthika

அகந்தை முன்னே செல்லும், அவமானம் பின் தொடரும். I've danced to AR Rahman's tunes and cheered for Rajinikanth, and now, I'm your go-to journalist for all things Tamil entertainment, offering an insider's perspective that's second to none.

வெளியிட்டது

புதிய செய்திகள்