விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல தொடர்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த தொடருக்கென மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே உள்ளது. முன்னணி ஹிட் தொடர்கள் வரிசையில் சிறகடிக்க ஆசை தொடரும் இணைந்து கலக்கி வருகிறது. நாளுக்கு நாள் தொடரின் சுவாரசியம் அதிகரித்து வருவதால் ரசிகர்கள் கூட்டமும் இந்த தொடருக்கு அதிகரித்து வருகிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த தொடரின் புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது. ப்ரோமோவில், ரோகிணிக்கு போன் செய்யும் பிஏ, ரோகிணியை செல்போனில் மிரட்டுகிறார். மேலும் காசு எப்போது வரும் என அவர் கேட்கவே, அதற்கு பதில் சொல்ல முடியாமல் தவிக்கிறார் ரோகிணி, அருகே ஈஸ்வரி அமர்ந்து இருப்பதால் எப்படி பேசுவது என்று புரியாமல் விழித்து கொண்டு இருக்கிறார் ரோகிணி.
மேலும் சாடை மாடையாக காசை திரும்பி தருகிறேன் என கூறுகிறார். உடனே ரோகிணி செல்போனை வைக்கவும் அருகில் இருந்த ஈஸ்வரி ரோகிணி யார் அந்த பிஏ என கேள்வி கேட்கிறார். அதனை கண்டு ரோகிணி பயந்து நடுங்குகிறார். இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று உள்ளது.
Embed Video Credits : VIJAY TELEVISION